பக்கம்:ஐயை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை.

கைதொடி நெகிழ்ந்தது; காற்சிலம் பகன்றது! ஐவனம் உகிரும் அங்கையும் அற்றன! அம்பொன் சீரடி அணிநடை மறந்தது!

செம்பொன் சிறுகுடம் ஒளிமழுங் கிற்று கொட்டிலில் ஆக்கள் கட்டிக் கிடந்தன! $80 பட்டியில் ஆடுகள் படுத்துச் சோர்ந்தன! எருவும் நீரும் இரண்டறக் கலந்து, நடவுறும் வயலெனக் கொட்டில் உளைந்தது; காய்த்த சுரைக்கொடி காயொடு காய்ந்தது! பூத்த மல்லிகை நிலத்தில் பொலிந்தது! 585

படுத்த படுக்கையாய்ப் பாவை கிடந்தாள்! உடுத்த துகிலொடும் உண்ணு வயிற்றெடும் முதியோள் திண்ணையில் முழங்கால் நீட்டிக் கொதிக்கும் நெஞ்சொடும் உயிரோடும் குமைத்தாள்! இப்பணந்திருந்தது. அடிவயிறழன்றது! 5.99 எடுப்பிலாப் பொருள்கள் இருந்தவா றிருந்தன! ஈரிரா இருபகல் அன்பீன் இருவரும் நீரும் பருகிடும் நினைவற் றிருந்தனர்!

வீசிய புயலால் விளைந்த விளைவைமாசிலா மங்கை மனத்துயர் தணிந்து, 595 'தன்னல் அன்றே தாய்க்கும் மகற்கும் இன்னல் விளைந்த தெனநினைத் தழுதாள்!

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/47&oldid=1273508" இலிருந்து மீள்விக்கப்பட்டது