பக்கம்:ஐயை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்.

ஈண்டிய செல்வம் இருப்பினும் இல்லற . 740 மாண்பிலா திருத்தல் மடமையென் றிடித்தும், காண்புறு மங்கையர் வாய்மைக் காதலைப் பேணிலான் பின்செலல் பேதைமை என்றும், ஆண் டமை நல்லர சோச்சிநா டாளினும் ஆண்துணை பற்றவள் வினென விளக்கியும், 745 அன்பினும் அறத்தினும் ஆண்மைத் துணையினும் இன்புற வாழ்வதே ஏற்றதென் றுரைத்தும், விரும்பிய தேய்ந்திடா வேளையில் வாய்ப்பதை விரும்பி மகிழ்வதே அறிவென விண்டும்,

ஆர்த்த இளமையில் அறிவினல் பெண்மையைக் 750 காத்துக் கொள்வதே கற்பெனக் கழறியும், உணர்ந்து கொளானே ஒதுக்கி ஒத்தானே மணந்து வாழ்வதே மாண்பெனக் கூறியும், பெண் பல பேறுகள் பெறினும் தாய்மைப் பண்பிலா வாழுதல் பழியெனப் பழித்தும், 755 அத்தை ஐயையின் அன்புறு நெஞ்சினில் வித்தாய் விளங்கிய செம்மலின் நினைவை அன்புறக் கல்லி அழித்திட முயன்ருள்!

குடிபுகுத் தானை அகற்றிடாக் குலமயில், "ஐயகோ அத்தை! அன்பினும் என்பினும் 760

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/56&oldid=1273517" இலிருந்து மீள்விக்கப்பட்டது