பக்கம்:ஐயை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை.

மெய்யினும் நரம்பினும் மிடைந்த சதையினும் கொப்பளித் தோடும் குருதித் துளியிலும், வெப்பமாய்க் குளிராய் விளங்குநல் உணர்வாய் எண்ண மாய் அறிவாய் இயங்கும் உள் உயிராய்த் திண்னமாய்க் கலந்தவென் காதல் திருவினை 765

மறந்துபோ என்ன து-மனந்துகொள் என்னது இறந்துபோ என்னினும் இறைவனல் என்னுளத்து ஆன்று சுடர் விடும் அத்தான் நினைவோடு ஈண்டே இவனே இறந்தொழி வேனே!

பெண்மையும் அன்பும் பின்னித் துளும்பும் 776 உண்மைக் காதலின் வன்மை உணராது அன்னைக் குலத்தின் அருமணி நீங்களே என்னை மறந்து மனந்துகொள் என்று வாய்மைத் திருவாய் வலியாது கூறிடின் தாய்மை மறந்து தருக்கால் குலேவுறும் 775 ஒவா உலகத்து யாரிடம் நான் போய்க் காவா நிற்பீர் என் அன்பெனக் கதறுவேன்! உய்விலர் தென்றன் உயிரின, இறைவனே, நொய்யச் சிதைப்பதில் என்பயன் கண்டையோ? ஐயகோ, அன்னய்' என்றே அலறி - 780 ஐயை வீழ்ந்தாள்! அத்தை தாங் கினளே!

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/57&oldid=1273518" இலிருந்து மீள்விக்கப்பட்டது