பக்கம்:ஐயை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை

அவன்தோள் பற்றிலள் ஆயினும் ஆயிழை அவனகம் பற்றி வாழ்வதை அறிந்தாள்! ஐயையின் பெருமையை அறிய அறிய மெய்யெலாம் சிலிர்த்தது; மெய்ப்பயன் புரிந்தது! ஐயையின் உளத்தை அன்புவாழ் கோயிலாய்க் 820 கைதொழு தேத்திள்ை! காதலை வழுத்தினள்!

அதன் பின் ஐயைக்கு அணி மணம் நிகழ்த்தும் புதிய விருப்பினை முதியவள் போக்கிள்ை! ஒண்டொடி மண ம்போல் உலாவர விட்டாள்! தண்டொடித் திடல்போல் தானமைந் தமர்ந்தாள்! 825

நாட்கள் ஓடின, கிங்களும் நகர்ந்தது! வாள் தடங் கண்ணியும் முன்போல் வாழ்ந்தாள்!

முதியோள் முதுமை முதுமை உற்றது! புதிரென் வாழ்வும் பொக்கெனப் போனது! அன்னைக்கு அன்னையாய் அத்தனுக் கத்தனய் 830 முன்னேக்கும் பின்னேக்கும் முழுவழி காட்டியாய் இனியநற் றுணையாய் ஐயைக்கு இருந்த கனிந்த அன்பின் கடலெனும் அத்தை காலப் புயலுள் கலம் போல் மூழ்கினுள்;

கோலப் புறவோ ஒலத்துக் குமைந்தது! 835 பிரிவால் துடித்தது! பேதுறக் கசிந்தது! -

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/60&oldid=1273521" இலிருந்து மீள்விக்கப்பட்டது