பக்கம்:ஐயை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-இரு பகுதிகளும் இணைத்த பதிப்பு இது. இதன் மு கற் பகுதி வெளிவந்த பின் இரண்டாம் பகுதி ஒன்று வெளிவரும் என்று யாரும் நினைத்திருக்கவே முடியாது. நானும் நினைக்க வில்லை. இதுபற்றி இதன் இரண்டாம் பகுதி முன்னுரையில் கூறியுள்ளேன்.

ஐயை-ஒரு பாவியத்தலைவி மட்டுமல்லள். நம் உணர்வோடு பொருந்தி வாழும் ஒர் உயிர்ப் பிறவியாகவே-நாம் மதித் துப் போற்றக்கூடிய-போற்றிப் பின்பற்றத் தகும் துய-முழுமை திசம்பிய பெண் பிறவியாகவே-கருதிய அன்பர்கள் பலர். அத்தகைய அளவில் அவள் படைப்பு உயர்ந்தது; உயிர்மை சான்றது,

வாழ்க்கையில் பல பெண் பிறவிகளே நாம் பார்த்திருக் கின்ருேம். ஆனல் ஐயை போலும் பெண்மை திரம்பிய ஒரு தெய்வத் திருவுருவை-மெய்ம்மை சான்ற ஒர் அன்புள்ளத்தைதாய்மை வடிவை நாம் அரிதாகவே பார்க்க வேண்டியிருக்கும், அத்தகைய பெண்களை நாம் கைதொழுது போற்ற வேண்டும். ஏனெனில் அவ்விறைமை சான்ற உள்ளங்கனால்தான் வாழ்க் கையே ஒருவகை மலர்ச்சி யெய்துகின்றது. வாழ்த்தோம் என்ற நிறைவும் ஏற்படுகிறது. - - - ஐ ைப யி ன் படைப்பை மெய்ம்மையாகக் கொண்டு. அவள் பால் அன்பும் இரக்கமும் யூனுகின்ற நல்லுளங்கள். இவ் வுலகில் மிகுதல் வேண்டும். அத்திருவுளங்களால் தாம் உலகமே பெருமை பெறுகிறது, கனிவும் காதலுக் உண்மை அன்பும் திரம்பிய பேருள்ளமாகப் பெண்மை மலர்ச்சியுறுமானல் வாழ்க் கையின் துன்ப நிழலைக்கூட பலர் உணரமாட்டார்கள்!

போவி நாகரிகமும் பொய்ம்மை நடைமுறைகளும் மலிந்து திசம்பிய நம் வாழ்க்கையில், அன்பின் குளிர்ந்த நிழலை நம் மில் பலர் உணர முடியாத அழுத்தம் நிறைந்துள்ளது. இந்நிலையில் ஐயை-போலும் தெய்வ அன்புணர்வு பொதிந்த பெண்மைத் திருவுளங்களே நமக்கு நல்ல வழிகாட்டிகளாக விளங்க முடியும். ஐபையை அனைத்துத் தாய்மை உள்ளங்களும் உணர்த்து படித்துச் சுவைத்தல் வேண்டும் என்பது என் பேராவல்!

சென்னை-5 } அன்பன் 1–1–1978, பெருஞ்சித்திரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/7&oldid=1273464" இலிருந்து மீள்விக்கப்பட்டது