பக்கம்:ஐயை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

ஐயையின் தனிக்குடில் அமைவினல் ஆன்றவிந்

தடங்கிய சான்றவர் கொள்கைபோல் நின்றது! கையறு நிலையினல் கன்னிமான் இளமையைக்

கழித்தது; சேரருே கன்றுபோல் வளர்த்தனன்! பொய்யறு நெஞ்சினர் வாழ்வுபோல் நிரைகளும்

பொலிந்தன கொட்டிலில்; பால்மணம் கமழ்ந்தது! மையற நின்றன. ஐயையின் விழிகளும்;

மற்றவள் மனத்துளே நின்றவன் செம்மலே! 2

காதலன் பிள்ளையால் கனிந்தவள் தாயுளம்

கண்ளுெடும் கருத்தொடும் ஆங்கதைக் காத்தது! சாதலின் கொடுமையால் அத்தையும் தும்பையும்

சாய்ந்ததை இடையிடை நினைத்துளம் கசிந்தது! ஈதலின் உவப்பிலா திகளப்பவன் நெஞ்சுபோல்

இணையிலா திஅளத்தது இ&ளத்தது பொலிவுடல்! தீதறு நல்லுளம் இளமையின் தெறலிளுல்

தேற்றுவார் இன்றியுள் தேம்பிக் குமைத்ததே! 3.

அமைவுறும் நடுக்கடல் பெய்திடு மாமழை

அகன்றிடு பாலையில் வீசிய நிலவொளிதமையனு கிலாவிடர்த் தோங்கிய தேனிருல்

தனிமைசேர் காட்டிடை மலர்ந்ததற் றனிமலர்இமையிலான் முன்னெதிர் இருந்தநல் லெழில்-என

இருந்தனள் இருந்தனள் இளங்கொடி! இயற்கையோ சமைவுறக் கொழித்தது கொழித்தது பேரெழில்: .

சாம்புத லுறும்படி சாய்த்தது காலமே! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/72&oldid=1273533" இலிருந்து மீள்விக்கப்பட்டது