பக்கம்:ஐயை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

குன்றமும் குடிலும் ஆவின்

கொட்டிலும் திரையும் மானின் கன்றெனும் பிறவாச் சேயும்

காலமும் தானு மாக ஒன்றவன் நினைவே தாங்கி ஒருத்தியே உறவு மாகி என்றுமவ் வழிமேல் வைத்த

இருவிழி உலவி வந்தாள்! 8

பணிவிழி பளிங்குக் கன்னம்

பவளவாய் எயிற்று முல்லை குனிநுதல் பின்னக் கூந்தல்

குதலைவாய் மடுத்த காது கனிவுளம் மெலிந்த செங்கைக்

கன்னி மான் புதினிக் குன்றத் தனிநெடும் பாதை யோடித்

தவிக்குநெஞ் சிக்ளக்க வாழ்ந்தாள்! 9

எவ்வொரு நினைவு மின்றி . - இளங்கொடி அவன்மேல் வைத்த

அவ்வொரு நினைவால் காலை

அலர்ந்தது. முதல்தொ டங்கி ஒவ்வொரு நொடியும் நாளும்

உலவினுள்; அவன்பொ ருட்டே செவ்வையாய் உடலைக் காக்கும்

எண்ணமும் சிறிது கொண்டாள்! IG

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/74&oldid=1273535" இலிருந்து மீள்விக்கப்பட்டது