பக்கம்:ஐயை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுடன் சிறையிருந்த அன்பர்கள் துயின்ற அமைதியான இராப்பொழுதுகளிலும் ஐயை வாழ்ந்த புதினிக்குன்ற மேே பள்ளங்களில் தனித்து உலா வந்தேன். அவளேயறியாமல் அவள் இன்ப துன்பங்களில் பங்கேற்றேன்; அவ ளொ ? அழுதேன்; விம்மினேன்; விசித்தேன். அவ ள் சேரைெே உயிர்ப்பாடுகையில் நானும் அருகிருந்து அவள் வாழ்வின் பேரவலங்கண்டு நெட்டுயிர்த்தேன். என் செய்வது? அவள் வாழ்க்கையின் போக்கில்தான் என்னல் போக முடிந்தது. அதை மாற்றியமைக்க என்னல் இயலவில்லை!

பாவியம் உருவாகிய அந்த இருபத்தைந்து நாட்களின் இடைப் பொழுதுகளில் பலமுறை அவளுக்காக அழுதிருக்கின்றேன்; அணற்றியிருக்கின்றேன். அவளுக்கு இன்பநிலை வாராதா என்று ஏங்கி அங்காந்திருக்கின்றேன். ஆனல் அவளுக்கு வந்ததுதான் வந்தது! பெற்றதைத்தான் அவள் பெற்ருள்! நான் என்ன செய்ய முடியும்? ஐயைக்காக இரங்கும் நான்' வேறு; அவ&ளப் ப்டைத்தளிக்கும் நான்' வேறு. இரண்டு "நான்"களையும் என்னல் ஒன்ருக்கவே முடியாது. ஒன்று உலகியல்; மற்ருென்று இறை யியல் ஒன்று படிப்பாற்றல் மற்றென்று படைப்பாற்றல்! ஒன்று சுவையுணர்வு மற்றது வினையுணர்வு இறுதியில் ஐயை' பச வியம் முடிந்தது ஆளுல் ஐயை'யின் நினைவு நில்லா உணர் வாய் நீண்டு கொண்டிருந்தது,

"ஐயை’ முதல் பகுதி உருவாகிய பொழுது, அவள் பற்றி மீண்டும் எண்ணுவேன் என்றே நினைக்கவில்லை. ஏன்? இரண்டாம் முறை அவளைக்கான விழைந்த தொடக்க நாட்களிலும்கூட, அவளுக்கு மீண்டும் ஒரு பகுதி வாழ்க்கை உண்டு என்றே எனக்குத்தெசி

யாது. இனி, எழுத வேண்டும் என்ற ஒர் உணர்வு வந்து அவளை

உருவாக்கிக் கொண்டிருந்த பொழுதுங்கூட அவள் வாழ்க்

கையின் இறுதி நிலையற்றி நான் அறிந்தவனல்லன். அவரை

உருவாக்கிய கருவிதான் நான்!) ஆனல் அவளை அவளேதான்

உருவாக்கிக் கொண்டாள்! எனவே, இவ்விரண்டாம் பகுதியின்

எந்த முடிபுக்கும் எனக்கும் எவ்வகை உலகியல் தொடர்பும் இல்லை என்றே கூறிக்கொள்ள வேண்டும். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/9&oldid=1273466" இலிருந்து மீள்விக்கப்பட்டது