பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2460 சொன்ன மொழி தன்னையெல்லாம் தொழுது நின்று ஒட்டனவன் அண்ணல் திருவுளத் தாலடியேங்க ளொப்பதன்னுன் கல்லு வரக் குற்றமில்லை கடுக விடுமாளை யென்ருன் இங்கொருநாள் முடக்கவில்லை இடுமினித்தான் கோட்டை யென்ருர். 4. சீர் சிந்து செங்கல் வந்ததும் கோட்டை கட்டுதல் அந்த மொழி கேட்டபோது அழகன் குலசேகரரும் அன்புடன் தம்பிமார் மந்திரி மாரையும் உற்ற துலாயாகவே திருவுளம் பற்றவே ஒக்கவே தாங்க ளொருமித்துக் கூடியே 2470 கல்லாலே கோட்டையிட வேணுமினிமன்ன கருவேலம் கட்டிக் கொடு போனரே காஞ்சிபுரம் எத்தனை தூரம் கனவண்டியும் ஆளும் கற்பியுமென்ருர் காவலன் குலசேகரர் எப்போது கங்கை மட்டும் கரையாள்கிருேம் நமக்கு மேற்பாகவே கோட்டையிடுகிருே மென்று விரையவே ஆளேவினர் மன்ன்ர் கண்ட கண்ட தேசங்களெல்லாம் காணிக் கஞ்சாளர் கற்பித்தார் மன்னர் 2480 வருவாரும் போவாரும் வண்டியில் கல்லேற்றுவாரும் ஒட்டாளாய்க் கூட்டுவாரும் ஒழுக்காளாய் நிற்பாரும் தெரிவாளாய் நின்ற வரைச் சென்றடித்து விடுவாரும் திரைகடல் போல ரவஞ் செய்து செங்கல்லோ வருகுதென்பார் மருவாரும் புகழ்படைத்த மன்னரெங்கள் குலசேகரர் தம்பிமார் மந்திரிகள் சகல படையத்தனையும் கோட்டையிட வேணுமென்று கூடினரெல்லாரும் செங்கல் வரக் கண்டபோது 2490 தீரன் குல சேகரப் பெருமாள் செங்கல் கொண்டு கோட்டை கட்டுவது சிறு நிலப் பகுதிகளை ஆளும் மன்னர்களுக்குப் பெரிய காரியம் ஆகையால் செங்கல்லால் கோட்டை கட்டுவதைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிருர் பாடகர்,