பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தவழி நீங்கள் வந்தீர் அருமை யென்று மவள் சொல்ல வழியில் கண்ட கூன் கிழவி வந்ததென்ன மாய மென்ருல் மொழி கேட்டவ்வையாருந் மூவர்க்கு மேது சொல்வார் மதுரை மன்னு பாண்டியனே வார்த்தை யொன்று சொல்லக் கேளாய் 3050 குதிரைக்குத் தான் காதவழி கூனிக் கிழவிக்கொரு நாழிகை வண்டமிழ் சேரவ்வையாரும் வார்த்தை சொன்ன நேரத்தில் கண்டார்கள் மூவருந்தான் கண்ணுயிரம் படைத்தோனே பண்டு முன்னுளில் பலவகைப் பச்சை மரகதம் பதித்த பலகை சங்கந்தன்னில் வந்த பலகை சர்வேசுரனுரிருக்கும் பலகை எங்கும் புகழ் கொண்ட மும்மூர்த்திகளும் யியல்புடன் வந்திருக்கும் பலகை செம்பொன்னலே சமைத்த பலகை தெய்வீகமான பலகைகள் மூன்று உம்பர்க் கிறையோன் கொடுத்திடவே உற்ற சேரனும் சோழப் பெருமானும் தாங்கள் கடக்கப் பலகையைத் தலை பொருதென்னத் - தரைமீதிருந்தார் ஓங்கும் புகழ் கொண்ட பாண்டியன் தானும் 3060 மல்லகாமல் பலகை மீதிருந்தாரே இருந்த பொழுதந்த தேவேந்திரனும் ராசாக்கள் மூவரையும் முகம் நோக்கி விருந்து சமையுது உங்களுக்கென்ன விரையக் குளித்தோடி வாருமென்ருர் சென்று திருமஞ்சனமும் போலிருந்து தேவாரமும் - கூட்டிவார நோத்திலே அன்று சுரையிலை தன்னைப்பறித்து யாருமறியாமலே வைத்துக் கொண்டு செந்தமிழ்ப் பாண்டியன் அந் நேரந்தானும் சிந்தை கலங்கா திருந்தது கண்டு பந்தியிருந்துண்ண வேணுமென்று பனிங்குமா மண்டபத்தின் மீதிருந்தாரே 3070 இருத்தி கலன்களும் பொன்னலே வைக்க யிவன் தான் சுரைமாலே தன்னைப் பறித்து 2980 முதல் 3020 வரை.--தேவேந்திரன் பாண்டியன் மீது கோபங் கொண்டு அவனுக்குத் துன்பம் விளைவிக்கப் பூகங்களை அனுப்பினன். பாண்டியன் பூதங்களுக்கு வேலை கொடுத்து அவற்றை ஏமாற்றிவிட்டான்.