பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

 அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா என எட்டு மகமதிய ராசாக்கள் மதுரையை ஆண்டார்கள். நாடு துலுக்காணியமாயிற்று. மதுரைக்கு வாய்த்த பெருமாளும் நாஞ்சிநாடு போனர். பெரிய ஆலயத்துப் பஞ்சாட்சர மதிலும் பதினான்கு கோபுரங்களும், தெரு வீதியும் இடிப்பட்டன. கற்பக்கிரகம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் வரைக்கும் தப்பியிருந்து, இப்போது பரியந்தம் துலுக் காணியமாயிருந்தது.”

இக்காலத்தில் மதுரையைச் சுற்றியுள்ள பகுதியில் சுல்தான்கள் ஆட்சி நடை பெற்றது. ஆனால் அதே காலத்தில் பாண்டிய நாட்டின் தென்பகுதிகளிலும், திருப்பத்தூர் காளையார் கோவில் முதலிய பகுதிகளிலும் இந்த சுல்தான்கள் மதுரையில் ஆண்ட காலத்திலேயே பராக்கிரம பாண்டியனும், அவனது வழிவந்த பாண்டியர்களும் வெளியிட்ட சாசனங்கள் கிடைக்கின்றன. எனவே பாண்டியர்கள் மதுரையினின்றும் பின் வாங்கி பல பகுதிகளில் தங்கள் கிளைக் குடும்பங்களை நிலை நிறுத்தி மதுரைப் பாண்டியர்களது வழிவந்தோராக தம்மைக் கருதிக்கொண்டு ஆண்டு வந்தார் கள் என்பது தெளிவாகிறது. பலமுறை மதுரையினின்றும் பின் வாங்கியப் போதிலும் அவர்கள் மீண்டும் மதுரைக்குத் திரும்பிவிட்டனர் என்று கண்டோம், ஆனால் சுல்தானிய ஆட்சிக் காலத்தில் தான் அவர்கள்மதுரைக்கு மீண்டும் வரும் முயற்சியைக் கைவிட்டு தெற்கே பல தலைநகர்களை நிறுவிக் கொண்டனர்.

சுல்தானிய ஆட்சியை ஒழிக்க கன்னடியர் வருகை

1. பல்லாள தேவன்

மதுரைச் சுல்தானிய ஆட்சியை அகற்ற ஹாய்சால மன்னன் மூன்றாம் பல்லாள தேவன் 1342ம் ஆண்டு முயன்ருன். சுல்தான் கியாத்துடீனுக்கும், பல்லாள தேவனுக்கு மிடையே நடந்த போரில் சுல்தான் உயிர் நீத்தான். இவன்தான் மதுரைவரை படையெடுத்து வந்த முதல்கன்னட மன்னன். வெற்றி பெற்றுத் திரும்பு முன் இவன் கண்ணனூர் கொப்பத்தில் தண்டிறங்கியிருந்தபோது முஸ்லீம் படையொன்று திடீரென்று படையைத் தாக்கி, இவனைக் கொன்று விட்டது. ஹாய்சாலப் படைகள் சிதறியோடின.

2.பக்க தேவன்

இதற்கு பிறகு "பகன் என்ற இளவரசன் குர்பத் ஹஸன்கங்கு என்ற மதுரை சுல்தனைப் போரில் கொன்றான்" என்று ஷாம்ஸி