பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டி முழங்கித் திடிமனும் போட்டு கோட்டைக்குள்ளே படைய வாங்கி விட்டாரே வாங்கியவரங்கிருக்க மற்ற நாள் விடியு முன்னே எழுந்தோங்கு கன்று புரவியுஞ் சூழ சிங்காரக் கட்டதுங் கட்டியிறுக்கி கொடிக் குளினிக் கோட்டை கொள்ள வேணுமென்க நூருயிரம் புரவி தன்னையுங் கட்டி 4000 படிக்குள்ளே யானை துவைத்து மிதிக்க பதினருயிரம் புரவி யொக்க மிதிக்கவே எட்டணியாகப் பட்ையும் வகுத்து இடங்கை, வலங்கை நெத்திகை யொக்குக பட்டத்துக்குப் பெரிய யானைகள் சூழ பல பலென விடியு முன்னமே சென்று சதிமான மாயவன் கோட்டையை முட்டி தங்கள் படை நாலு திக்கிலும் வகுத்து பதினேழக் ருேணி பனி போலே சென்று பல சக்கரத்தை நிறுத்தி விட்டானே 4810 நிறைந்த படை சென்று கோட்டையு முட்டி நேரே வடக்குக் கோட்டை வாசலிலே பரந்த படையைக் கொல்ல வேணு மென்ன பார்த்து வக்க விளக்கி விட்டாரே குப்பைப் படையும் குதிரைப் படையும் குடைக்காரனைப் போட்டுகுட்டுதே யுண்டை வலங்கையில் போனபடை சேர வந்து வலத்தே யேறிக் மேல்க் கோட்டையை மூட்டி இலங்காபுரிக் கோட்டையில்ப் பொருவது போல இரையுந் துவக்கை யிளக்கி விட்டாரே 4020 ஆனையும் பட்டு குதிரையும் பட்டு 3994-படையை வாங்கி விட்டார்-படையைப் பின் வாங்கிவரச் செய்தார் 3999-நான்குனேரித் தாலுகாவில் உள்ள ஊர்கள் 4003 இடங்கை, வலங்கை, ஒத்திகை இரண்டு பிரிவுகள் தான் முக்கியமானவை. இடங்கை, வலங்கைப் பிரிவுச் சாதி கனைப் பற்றிச் சாசனங்கள் கூறுகின்றன. நெத்திகை என்பது மூன்ருவது பிரிவு ஒருப்பிரிவு என்பது பொருள் மூன்றுகை வேளைகாரர்களைப் பற்றிக்கோயில் சாசனங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனல் மூன்ருவது பிரிவு யாரைக் குறிக்கிற தென்று தெரியவில்லை. 4018-இராமனது வயனரப்படை