பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படையோட வந்து விட்டான் பாண்டியர் கோட்டைக் குள்ளே சளையாமல் பின்னையுந்தான். தானெதிர்த்துப் படை பொரு தான் படை யானை பரிகுதிரை பரிகலங்களுள்ள தெல்லாம் இடையறவே தண்ணிருமில்லை யென்று மனஞ்சலித்து பேராவித் தண்ணிரும் புரமடைக்கரைத் தண்ணிரும் நீராவி தண்ணிரும் நெடுங்குளத்துத் தண்ணிரும் அவசரம் வரதறியாமல் அநேக நாளைக் கேற்றி வைத்து தவசக் கட்குத் தேங்காயில் தண்ணிருந்தான் குடித்தான் என்று மந்தக் கன்னடியன் லக்கமற்ற படையோடே 4430 ஆறுமாதம் பின்னையுந்தான் அசையாமல் படை பொருதார் படை பொருது நிற்கும் நேரம் பழி படைத்த சோதிரியும் மடையதுவு மடைபட்டுதே மன்னவரும் குலைப்படுவார் இணை பெரிய பாண்டியனரிட்ட கோட்டையுந்தானழியும் கணப் பொழுதில் கோட்டை தன்னை கன்னடியன் கொள் வானென்ன கண்ட மண்டிப் பொருதுகின்ற கன்னடியன் நிற்கும் நேரம் நாட்டுக்குக் குலுக்கு மென்று நடந்து விட்டான் சோதிரியும் 4440 பாண்டியர்கள் மாளிகைக்கே பாதி ராவு தீயும் வைத்து மூண்டு வந்த அக்கினியால் விரையவங்கே நடப்பானும் சதிராகச் சோதிரியும் தானுெளித்துப் போனபோதே மதிக்க வொண்ணுப் பாண்டியரும் மந்திரிமாரும் ஒன்ருய்க் கி.டி. படை பலிப்புக் காரியமும் பரிந்து படைத் திருப்பானென்று அடக்கமுடன் கேட்க வென்ன ஆள் விட்டார் சோதிரிக்கு ஆளோடி வீட்டில் செல்ல அவன் பதியில் காணுமல் மீண்டோடிப் பாளையமும் மிகுந்ததொரு படைகளெல்லாம் கடைத் தெருத்தனையும் கண்ட கண்ட விடங்களெல்லாம் தேடியெங்கும் காணுமல் திருநீலகண்டானட்டன் 4450 ஓடிவந்து தெண்டனிட்டு உள்ள லெல்லாஞ் செல்ாலுவாளும் வண்டு சுற்றும் துடை மன்னர் மன்னவனே பாண்டியனே உண்ட சோத்துக்கு ரெண்டகஞ் செய்து உபாயமிட்டு வந்தவன் காண் கண்டுத் தில்லைச் சோதிரியை கடந்து விட்டாணிவிடம் விட்டு 4416-யான பலியிடுவது எந்தப் பாடலிலும் வராதது. புதுமை 4416 - பெலி-பலி 4440 -ராவு-இரவு (நெல்லை, குமரி பேச்சு வழக்கு) 4453 கண்டுதில்லை-கண்டதில்லை (திரிபு) பேச்சு 44.54 சம்பி-சார்ந்து, சுருங்கி (குமரி புா. வ)