பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15


பிஜாப்பூர், கோல்கொண்டா, பாமினி முதலிய முஸ்லிம் அரசுகளின் தாக்குதலைச் சாமாளிக்க நரசிம்மன் தமிழ் நாட்டிலுள்ள அரசுகளை தனக்குக் கீழ்படியச் செய்வதற்காக நரச நாயக்கனைப் படையோடு அனுப்பினன். இதுவரை சுதந்திர ஆட்சி நடத்திய பாண்டியர்களை அடக்கி அவர்களை விஜயநகர ஆட்சிக்குக் கீழ் சிற்றரசர்களாக ஆக்குவது இப் படையெடுப்பின் நோக்கங்களில் ஒன்று. இப் படை யெடுப்பு முடிந்தபின் நரச நாயக்கன் வெளியிட்ட சாசனம் ஒன்றில் அவன் "சேர சோழ பாண்டியர்களையும்” மானபூஷணனையும் கொடுந்துருக்கனையும் வென்று விட்டதாகக் கூறிக் கொள்ளுகிறான். அக்காலத்தில் சோழர் பரம்பரை மறைந்து போய்விட்டது. சோழர் ஆட்சி மறைந்து போனபிறகு காடவர் குலத்தைச் சேர்ந்த கோனேரி ராஜன்தான் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். அவனத்தான் 'சோழன்’ என்று சாசனம் குறிப்பிடுகிறது, அங்குப் பதவிப் போட்டி ஏற்பட்ட குழப்ப நிலையில் அவன் சுயாதிகத்தை ஸ்தாபித் துக்கொண்டான். நரச நாயக்கன் அவனோடு போர் செய்து அவனே கப்பங்கட்டுப்படி செய்தான். நரச நாயக்கல்ை தோற்கடிக்கப்பட்ட பாண்டியன் யார்? என்று அறிவது கன்னடியனோடு போரிட்ட பாண்டியன் யார்? என்று அறிவதற்கு அவசியமாகும். 1480ல் அரசு கட்டிலேறிய ஜடாவர்மன் குலசேகரன் பராக்கிரம பாண்டியன்தான் நரச நாயக்கனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டியன். அவன் 1507 வரை அரசாண்டான். பஞ்ச பாண்டியர்கள் தென்காசிப் பாண்டியர்களே என்று இப்பகுதியில் வழங்கும் கர்ண பரம்பரையைச் செய்திகள் கூறுகின்றன. நரச நாயக்கனது சாசனம் கறும் மானபூஷணனும், பாண்டியனும் பஞ்ச பாண்டியர்கள் என கதைப் பாடல்கள் குறிப்பிடும் பாண்டிய மன்னர்கள் தாமா ? நரச நாயக்கன்தான் கன்னட படையெடுப்பாளனா ? இவ்வாறு முடிவு செய்வதற்குத் தடையாகச் சில பிரச்சினைகள் எழுகின்றன. கதையில் குலசேகர பாண்டியன் விஷம் தின்று இறந்து போகிருன். ஆனால் நரச நாயக்கைேடு போரிட்ட மானபூஷணன் இப்போருக்குப் பின்னும் பல ஆண்டுகள் சாசனங்கள் வெளியிட்டிருக்கிருன். படையெடுத்து வந்த கன்னடியன் மகளை பாண்டியனுக்கு மணம் செய்து கொடுத்ததாக எந்தச் சாசனமும் கூறவில்லை தவிர, கன்னடியனும் பாண்டியரும் போரிட்ட இடங்கள் வள்ளியூரும், கயத்தாறும் என்று இரண்டு கதைப்பாடல்கள் கூறுகின்றன.

இப்போருக்குப் பின்னர் திருவனந்தபுரம் அரசன் பூதல வீர உதய மார்த்தாண்டம் படை கொண்டு வந்து தென்காசியைக் கைப்பற்றி ஜடில ஶ்ரீவல்லபதிரிபுவன ஶ்ரீவல்லப பாண்டியனை