பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17


வெட்டு ஆதாரமும் உண்டு. கயத்தாறுக்கு அருகேயுள்ள இளவேலங்கால் என்னும் ஊரில் சில குத்துக் கற்கள் காணப்ப்டுகின்றன. அவற்றில் குதிரை மேல் ஒருவனும், காலாள் ஒருவனும் சண்டையிடுவதாகச் சித்திரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் கீழ் வெட்டும் பெருமாள் வெங்கல ராசன் போர் என்று தமிழ்க் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக் கல்வெட்டின் காலம் 1547 என்று குறிப்பிட்டுள்ளது.

இச் சம்பவங்கள் வெட்டும் பெருமாள் ராஜனின் கதைப்பாடல் சம்பவங்களோடு பெரிதும் பொருந்துகின்றன. வள்ளியூர் குலசேகர பாண்டியனைப் பற்றிய ஐவர் ராசாக்கள் கதையோடும் ஓரளவு பொருந்துகின்றன. கன்னடியரிடம் பாண்டியன் தோற்றுப் போனன் என்பதும், பாண்டியன் மரணமடைந்தான் என்பதும் கதைப்பாடல் நிகழ்ச்சிகள் வரலாறு மூலம் நாமறியும் நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கின்றன. வரலாற்றில் போர் நடந்த காலம் 1544. இளவேலங்கால் கல்வெட்டு அக்காலத்திற்கு அணித்தான காலத்தைக் குறிப்பிடுகிறது. அதன் காலம் 1547.

வள்ளியூர் குலசேகரன்

6. ஐவர் ராசாக்கள் :

வள்ளியூர் கோட்டையைக் கைப்பற்ற நடந்த போரைப் பற்றி ஐவர் ராசாக்கள் கதை கூறுகிறது.

மாலையம்மையின் புதல்வனான குலசேசரபாண்டியன் கொல்லம் 442 ல் (கி.பி. 1226ல்) வள்ளியூரில் கோட்டைகட்டி, கோட்டாற்றில் தான் மணந்து கொண்ட ஆசைநாயகி உலக முழுதுடையாளோடு சிறிது காலம் வாழ்ந்தான். அவனது வம்சத்தினர் 60 ஆண்டுகளுக்குப் பின் அங்கு ஆண்டு வரும் பொழுது கன்னடிய தேசத்தரசன் ஒருவன் தன் சேனைகளுடன் பாண்டிய நாட்டிற்கு வந்தான். அப்பொழுது வள்ளியூரில் ஆண்டு வந்த குலசேகரனுக்கு நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் பெயர்கள், முத்தும் பெருமாள், முகிலம் பெருமாள், முடிசூடும் பெருமாள், பாண்டியப் பெருமாள் என்பன. முதல் படையெடுப்பு கன்னடிய அரசனுக்குத் தோல்வியில் முடிந்தது. அவன் நாடு திரும்பினான். பின்னர் குலசேகரன் வள்ளியூர்க் கோட்டையை காளிங்கன் என்ற அதிகாரியின் பொறுப்பில் விடுத்து மதுரை சென்றன். இடைக் காலத்தில் வள்ளியூர் கோட்டையின் ஆட்சியில் ஊழல்கள் மலிந்தன. அறம்