பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19


நாட்டிற்கு வடக்கேயிருந்து வரும் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பைத் தடுக்கும் நோக்கமுடையவர்கள் என்பது தென் தமிழ் நாட்டு மன்னர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் தெரியாது. ஏனெனில் 42 வருடங்களாக மதுரையில் நடைபெற்ற சுல்தானிய ஆட்சியின் கொடுங்கோன்மையை இப்பகுதி மக்களோ மன்னர்களோ கண்டதில்லை. எனவே முஸ்லிம் ஆட்சியையும், தொன்மையான மரபுவழி நாகரிகத்தையும் பாதுகாக்க வேண்டுமென்று விஜயநகர அரசர்களுக்கு ஏற்பட்டிருந்த உணர்வு போல இப்பகுதி மக்களுக்கும், மன்னர்களுக்கும் ஏற்படக் காரணம் இல்லை. எனவே கன்னடிய மன்னர்களை எல்லை மீறி நுழைந்த பகைவர்களாகவே அவர்கள் கருதினர்.

கதைப் பாடல்கள், குலசேகரனத்தான் கதைத் தவைனாகக் கொள்ளுகின்றன. அதற்குக் காரணம் தமிழகம் முழுவதும் ஒன்று படுத்தி ஆண்ட குலசேகரனின் பெருமையை, நாடு சிதறி சுருங்கிக் சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்துவிட்ட பின்னரும் சிற்றரசர்கள் மறக்கவில்லை. அவனேயே தங்களது முன்னோன் எனக் கருதினர். தமிழ் நாடு முழுவதும் பாண்டியர் ஆட்சி மீண்டும் பரவ வேண்டும் என்ற கனவு அவர்களை விட்டு நீங்கவில்ல்ை.

ஒவ்வொரு கதைப் பாடலும் வெவ்வேறு சம்பவத்தை அடிப் படையாகக் கொண்டிருப்பினும், பொதுவாகக் கன்னடியர்களது பல படையெடுப்புக்களையும் அவற்றில் தொடர்பு கொன்டி அரசர்களையும் கால வேறுபாடுகளே ஒதுக்கி சகோதரர்களாகவே பாவித்துக் கூறுகிறது. 'பஞ்ச பாண்டியர்' என்ற பண்டைப் பெருமையைக் கன்னடியரை எதிர்த்து நின்ற ஒவ்வொரு பாண்டியர் குல அரசனுக்கும் சிற்றரசனுக்கும் கதைப் பாடல்கஇ பொருத்திக் கூறுகின்றன.

இப்போர்களின் காலம்

கயத்தாற்றுப் போர் நடந்த காலத்தில்தான் வள்ளியூர்க் கோட்டைப் போரும் நடந்திருக்க வேண்டும். ஏனெனில் அதற்குப் பின்னர் நாயக்கர் காலம். அக் காலத்தைப் பற்றி கயத்தாறு வரலாற்றில் மறுபடியும் விஸ்வநாத நாயக்கன் காலத்தில் ஒற்றை மற்போரில் தோற்று பஞ்ச பாண்டியர்கள் நாட்டை விட்டுச் சென்றதாக அறிகிறோம்.

ஆனால் வள்ளியூர் வரலாற்றில் நாயக்கர் கால சம்பவங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே இப்போர் நாயக்க