பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மாலையிட்டவன் பிணமாய்ப் போனான் வீட்டிலே குழந்தைகள் அஞ்சாறு உண்டும் ஓலை யொதுக்கில்லை கூரைக்குள்ளே உப்புச் சிரட்டையும் காணாது சுடலைக் காட்டிலே புகையைக் கண்டால் துட்டுத் தடிக்காரன் வருவானே 650 மடவார் குடத்துக்கும் பிணம் தனக்கும் வரியுண்டாச்சுதே என்று அழுதேனன்றி கெடுதியாய்ச் சொல்லி அழுதேனில்லை கேள்வி ராசாவே எனச் சொல்லினாள் பெண்ணின் முகம் நோக்கிக் குலசேகரன் பின்னும் செலவுக்குப் பணம் கொடுத்தார் வன்ன மடவாளைப் போகச் சொல்லி மந்திரி முகம் பார்த்து ஏதோ சொல்வார் வேறு தடிக்கான் என்பவனாரடா? வேண்டிச் சொல்கிற மந்திரி யாரோடா? 660 பேணியே குடக்காசு வாங்கவும் பிணத்துக் கஞ்சு பணம் வாங்கச் சொன்னது கலியாணத்துக்கு அஞ்சு பணம் வாங்கவும் கண்ட பேர்க் கெல்லாம் காணியாய்ப் போச்சுதோ? தலையாரிகளைக் கூட்டி வாருங்கோ தமுக்குப் போட்டுக் கழுவுஞ் சமையுங்கோ மதுரை நாட்டுக்குக் குதிரைக் காரர் சென்று மந்திரி வீட்டை முத்திரை போ”டென்றான் கதுவிப் பாளையக் காரரைக் கண்காட்டி காரியக்காரர் தம்மை கொண்டு வந்தார் 679 தஞ்சாவூரில் வடுகரைக் கண்காட்டி தம்பிமாரை மறித்துக் கொண்டு வந்தார் குறிஞ்சிக் கூட்டந் தன்னை மிட்டக் கூப்பிட்டு 'கோட்டை வாசலில் கழுவதை நாட்”டென்றான் அளவிடைப் பிரமாணத்தில் நில்லாமல் ஆசை வைத்தால் அழியாதோ காளிங்கா களவு செய்வானைக் கச்சை தொட்டாடவே கன்னக் கோலுக்குத் தெய்வமுண்டோ கெங்கைக்கும் சிப்பானிக்குமாய்ப் பெண்கள் குச்சு காத்தித்திக்கவே பின் 680 செங்கோல் தப்பி நடக்கின்ற காலத்தில்