பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுச் சபையில் வந்து நின்று நாடியிலே தடி யூன்றி வடுப்படா பாண்டியனை 800 வணங்காமல் நின்றனனே ' கூத்தாடி யானாலும் கும்பிடுவான் வந்து நின்று காத்தவனைக் கொண்டாடுங் கைத்தடிப் பேயாட்டமுண்டோ? சந்திப்பு வைக்கவில்லை தாள்ச் செருப்பு நீக்க வில்லை வந்த செய்தி சொல்லவில்லை மடை படியில் பூதமிதோ? விறகெடுத்த புத்திதன்னை 810 விழுங்க வந்த புத்தியிதோ? முணு முணுத்துச் சனங்களெல்லாம் முழுக் கோவங் கொண்டு நிற்க, அடக்க முடன் பாண்டியனார் அறியாத வகை நகைத்து குடக் காசுக் குத்தாரங் கொடுத்த தார்?" எனக் கேட்டார் " அடியேன் வந்தே னென”வே அஞ்சலி செய்தே வணங்கி காடு வெட்டிப் பயிரெடுத்த 820 கையறிய மாட் டேனோ? பாடுபட்டு வியாபாரம் பண்ணுதற்கு என்னைப் போல வீட்டுவழி இரந்து குடித்தாரு:முண்டோ? மின்னிடை யார் தன் காலால் மிதிபட்ட பேரு முண்டோ? பாண்டியனே நீ என்னைப் போல பட்டினியாய்க் கிடந்ததுண்டோ? வேண்டாத தன்பமதை 830 விலக்கி வைக்கத் திறமுமுண்டோ? ஊர் முழுதும் அழுதழுது ஓலமிட்டுத் திரிந் தேனே சாருமிந்தச் சன முழுதும் சாகாமலிருந்தீரோ? அழுதபிள்ளைக் கிரங் காட்டால் அம்மையுண்டோ? அப்பனுண்டோ?