பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பொன்னினால் எண்பது..... வெள்ளிக்காசு மரக்கால் இருபது வராகன் தானும் மரக்கால் ஒன்பது தள்ளிவில்லிட்ட காசும் மேல்படி தங்கக் காசு குறுணியளந்தனன் இன்னும் வேண்டிய தெல்லா மிருப்பதால் மன்னவன் அதைக் கேட்டுப் கிளர்ந்து தான் மதயானை அலங்காரம் பண்ணியே 870 ஆயிரம் பொன் வெகுமானம் பண்ணியே அவனி மயக்க பவனி வரச் சொன்னார் வாய்த்த தம்பிமார் மந்திரிமாரையும் வள்ளியூர் சுத்திக் கூடவரச் சொன்னார் பட்டணத்தை வலஞ்சுத்தி. வந்தபின் பாண்டியனை வலஞ்சுத்திச் சேவித்தான் மட்டில்லாத விறகு சுமந்தேன் நான் மதயானை சுமந்துதே என்னைத்தான், முன்னமே உன்னைச் சந்தித்த பாக்சியம் மூன்று கோடி பணக்காரன் ஆனேன் நான் $80 உன்னைக் கேளாது உனக் கென்று தேடினேன் உலகில் குத்தம் எனக்கில்லை தான் என்றான். புன்மை தின்மைக்கு அஞ்சுபணம் நீக்கினேன் நாட்டில் அக்குடக்காசையும் நீக்கினேன் புன்மையான புலையாட்டுத் தேடினேன் பொக்கிஷத்துக் குள்ளே போட்டுக்கொள்வாய் ஆறிலொன்று பணத்தைப் பகிர்ந்து தான் ஆண்டவன் வள்ளியூர் தெய்வத்துக்காக்கினா மாறிலாறு பங்கை எடுத்தவன் வறுமை கண்ட பெரியோர்க் கீந்தனன் 890 பின்னொரு பங்கை எடுத்தவன். பிராமணர் வேள்விக்காகக் கொடுத்தனன் பின்னொரு பங்கை சிவாலயம் பூசை செய்திடத் தேசத் திலிட்டனன் பொக்கிஷத்தில் ஒரு பங்கு போட்டனன். புகழும் வீணாதி வீணனுக்கோர் பங்கு இலக்குத் தப்பாமல் வீணாதி வீணனை இளைய மந்திரியாய் வைத்துக் கொண்டனன் வாழ்த்து வள்ளியூர் குமரப்பன் வாழிதான் வன்மை சேர் குலபாண்டியன் வாழிதான்