பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23


பிறந்த வரலாறு 'மாலையம்மை கதை என்று தனியாக ஒரு பாடலாக உள்ளது. இக்கதைப் பாடலுக்கு முன் எக்கதைப் பாடல் வழங்கி வந்ததென்று தெரியவில்லை . ஆனல் காப்பியங்கள் இருந்தன. அவற்றிற்கு ஆதாரமாகக் கதைப் பாடல்கள் இருந் திருக்க வேண்டும். காவியங்களில் இம்மரபு காணப்படுகிறது' கதையின் பிற்பகுதியொன்றில் குலசேகர பாண்டியன் பாண்டியர் குலப் பெருமை பற்றிக் கூறுகிறான்.

தெய்வப்பிறவி

இதைக் கூற வேண்டிய வாய்ப்பு, கன்னடியன் தன்னுடைய மகனை அவனுக்கு மணம் செய்துவைக்கும் விருப்பத்தை ஒற்றன் மூலமாகச் சொல்லியனுப்பியதைக் கேட்ட போது ஏற்படுகிறது கன்னடியன் வம்சம் தனது வம்சத்திற்கு நிகரானதன்று என்று காட்ட குலசேகரன் தங்கள் பாண்டிய வம்சம் தடாதகைப் பிராட்டி சுந்தரேசுவரிடமிருந்து தோன்றியதென்றும், வீரத்திலும், ராஜதந்திரத்திலும் சேர சோழர்களே விடச் சிறந்ததென்றும் கூறச் சில பழங்கதைகளைச் சொல்லுகிருன். இவை இக்கதை தோன்று முன்னர் வழங்கிவந்த புனைகதைகளே: அரசர்கள் தங்களை தெய்வ மரபினர் என்று மிகப்பழங் காலத்திலேயே கூறிக் கொண்டுள்ளனர். இதை உறுதிப் படுத்தப் பல புனைகதைகளும் தோன்றியுள்ளன. தமிழ் நாட்டில் அரசர்களது மெய்க் கீர்த்திகள் தோன்று முன்னரே இக்கதைகள் வாய்மொழியாக வழங்கி வந்திருக்கின்றன. (உ-ம்-மேகங்களைச் சிறை செய்தது, தூங்கெயில் எறிந்தது) அவை மெய்க் கீர்த்திகளாக புனைப்பட்டன. கி. பி. 3, 4ம் நூற்ருண்டுகளில் தெய்வங்களின் வம்சமாகத் தங்களைப் பல்லவர்கள் அழைத்துக்கொண்டார்கள் என்பதை அவர்களுடைய சாசனங்களிலிருந்து அறியலாம். இதன் பின்னர் சிறிது காலம் புகழ்பெற்றிருந்த பாண்டியர்களும் பல்லவர்களுடைய வழக்கத்தைப் பின்பற்றினர். சின்னமனூர்ச் சாசனம் போன்ற சாசனங்களில் தங்களைத் தெய்வ பரம்பரையினர் என்று கூறிக்கொள்ளுகிறார்கள்.

பழைய வீரக்கதைகளை பயன்படுத்துதல்

தேவலோகத்தில் அவர்கள் செய்த வீரச் செயல்களையும் அவர்கள் தங்கள் சாசனங்களில் கூறிக் கொள்ளுகிறார்கள். இந்த மரபை பிற் காலச் சோழர்களும் தங்கள் சாசனங்களை எழுதுவிக்கும் பொழுது பின்பற்றினர்கள். எழுதப்படுவதற்கு முன்னலேயே வாய்மொழியாக இப் புனைகதைகள் வழங்கியிருத்தல் வேண்டும் என்