பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



25

புனையப்பட்ட புனைகதைகளையும் தங்களுடைய குலப்பெருமை கூறும் கதைகளோடு சேர்த்துக் கொண்டார்கள். கன்னடியர்கள் சிறிது காலமாக சாதாரண மனிதர்களாயிருந்து அரசர்களான வரலாறு மறைந்து பல கதைகள் தோன்றி அவர்களது தோற்றத்தைத் தெய்வ பரம்பரையாக்கும் அளவுக்குக் காலம் கடந்து விடவில்லை. அவர்கள் ஏற்றம் பெற்றுச் சில நூற்றாண்டுகளே கடந்திருந்தன. எனவே தனது குலப் பெருமைக்கு, குலப்பெருமையில்லாத கன்னடியன் குலத்தில் பெண் கொள்ளலாகாது என்று குலசேகரன் கூறுகிறான். கன்னடியர்கள் விஜயநகர ஆட்சியை நிறுவிய சில நூற்றாண்டுகளுக்குள்ளாகவே தமிழ் நாட்டு மன்னர்களோடு பல போர்களில் ஈடுபட்டார்கள். அவர்களைப் பற்றிய பல புனைகதைகள் அக்காலத்தில் பரவி விடவில்லை. . கோட்டையில் நிகழ்ச்சிகள் வள்ளியூரில் கோட்டை கட்டிய வரலாறு ஒரு தனி கதையாகவும், இக்காவியத்தின் உறுப்பாகவும் காணப்படுகிறது. இக் கோட்டையின் தெற்குச் சுவரைச் சோதிடனது சூழ்ச்சியால் அழித்து அதன் பின்னர் அதனைக் கன்னடியன் கைப்பற்றியதாக இக்கதை கூறுகிறது. எனவே கோட்டையைக் கட்டிய வரலாறு கூறப்படவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் கோவிலோ, கோட்டையோ கட்டப்பட்டதுபற்றி ஒர் புனைகதை இருக்கும், எந்தக் கோட்டையின் தோற்றத்தைப் பற்றியும் ஒரு நாட்டுப் புனைகதையிருக்கும். இக்கதையில் தன் தென்னாட்டுப்பயணத்தின் போது கோட்டாற்றில் பாடும் பரசியைப் பார்த்து ஆசைக் கொண்டு அவளுக்குப் பரிசளித்து அவளோடு வாழ்ந்து வரும் பொழுது பாண்டியன் படை வேட்டைக்குச் செல்லுகிறது. வள்ளியூரில் வேட்டை நாயை முயலை விரட்டுகிறது. அரசன் சென்று பார்க்கும் பொழுது அது காளியின் இருப்பிடமாகத் தெரிகிறது. காளி வெற்றியளிக்கும் தெய்வம். அங்கு கோட்டை கட்டுகிறார்கள். கோட்டை வெள்ளத்தால் அழிந்து போகிறது. அதன்பிறகு காஞ்சிபுரத்திலிருந்து செங்கல் கொண்டுவந்து கோட்டை கட்டப்படுகிறது. கோட்டை கட்டியதாக பாடலில் காணப்படும் காலக்குறிப்பில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இது நடந்ததாகத் தெரிகிறது. இக்காலத்தில் காஞ்சியை வீரபாண்டியன் கைப்பற்றி ஆண்டான். அதன் பிறகும் சில பாண்டிய மன்னர்கள் காஞ்சியின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் கதைப் பாடலில் குறிப்பிட்ட வரலாற்று நிகழ்ச்சிகளனைத்தும் முடிந்த காலத்திற்குப் பின்தான் தோன்றியிருத்தல் வேண்டும். வரலாற்று திகழ்ச்சிகளைப் பொதுவாக நோக்கி