பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



27

கோட்டையில் மோர் விற்கும் இடைப்பெண் ஒருத்தி மயிைலுள்ள ஓர் சுனையில் தனது குடுக்கையைப் போட்டு விடுவிருள். மறுநாள் அது வள்ளியூர் குளத்தில் அகப்படுகிறது. இதனை அவன் அதிசயம் என்றெண்ணி வெளியே சொல்லி விடுகிறாள். இதையறிந்த கன்னடிய ஒற்றர்கள் அவளைத் தேடிப்பிடித்து, ஊற்றைக் கண்டு பிடித்து அடைத்து விடுகிறார்கள். வள்ளியூர் குளத்துக்குத் தண்ணீர் வராமல் நின்று விடுகிறது. குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். கோட்டையைப் பிடிப்பது எளிதாகிறது. இத்தகைய கள்ளமடைக் கதைகள் காதல் கதைப் பாடல்களில் காணப்படுகின்றன. இக்கதை இப்பாடலின் இறுதிப் பகுதியில் காணப்படுகிறது. சில பகுதிகளில் காணப்படவில்லை. . . .

இவ்விருகதைகளும் கோட்டையைப் பற்றிய வரலாறாக காவியத்தோடு நெகிழ்வாக இணைக்கப்பட்டுள்ளன. கன்னடியர் போர் இக்கதையின் பிரதான நிகழ்ச்சி பாண்டியர் கன்னடியர் போராகும். இப்போர்களுக்குப் பல அரசியல் காரணங்கள் இருப் பதை முன்னர் கூறினேம். ஆனல் காவியம் வேறோர் காரணத்தைக் கூறுகிறது. காவியம் வரலாற்றுப் போரைக் குறிப்பதாயினும், கற்பனையில் பலபோர்களை ஒரே போராக மாற்றியுள்ளது. வரலாற்றுக் காரணங்களைக் கூறாமல் காவியத்துக்கு அவசியமான ஒரு கற்பனைப் பாத்திரத்தைப் படைத்து, அக்கதாபாத்திரத்தின் காதலே இப்போருக்குக் காரணமெனக் கூறுகிறது. இக்காதல் சாத்தியமானதன்று. ஏனெனில் குலசேகரனும், கன்னடிய மகளும் வெகு தூரத்திற்கப்பால் வாழ்பவர்கள். எனவே கதாசிரியர் இவர்களை இணைக்க ஒரு சம்பவத்தை புனைந்துள்ளார். அதுதான் பண்டாரங்கள் குலசேகரளைப் படம் வரைந்து பல ஊர்களுக்குச் சென்ற பொழுது, தற்செயலாக கன்னடியர் பட்டனத்தில் கன்னடியன் மகள் படத்தைக் கண்ட நிகழ்ச்சி. அவள் மனத்தில் தோன்றிய காதலை தந்தையிடம் வெளியிட்டுத் தூதனுப்பச் சொல்லுகிறாள். தூது சென்ற ஒற்றனிடம் குலசேகரன் சம்மதிக்க முடியாதென்று சொல்லியனுப்புகிறான். பாண்டியனது மந்திரி காளிங்கன் கன்னடியன் மகளை மணந்து கொண்டு, அரண்மனையிலுள்ள பல காதல் கிழத்தியருள் ஒருத்தியாக நடத்த ஆலோசனை கூறுகிறாள், இச்சமயம்தான் குலசேகரன் தங்கள் குலப் பெருமைபற்றிய கதை களைக் கூறுகிறான், இத்தகை குலப் பெருமையில்லாத கன்னடியல் மகளை மணந்து கொள்ளுவது தங்கள் குலப் பெருமைக்கு இழுக்கு எனக் கூறி அவளை மணந்துகொள்ள முடியாதென மறுக்கிறான்.