பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹரிஓம் நன்றாக குருவே துணை

ஐவர் ராசாக்கள் கதை

தெய்வ வணக்கம்28

அலை உலவு செந்தில்வாய் வந்து செக்கடியில்
அருள் வளரும் கருணைசால் கீழ் மனதில்
மிகுதினந்தோறும், மகிழ்ந்து கூடி என்நாவில்
வளர் மன்னன கந்த பிரான் மனையோட
சேர் பத்துலகில் மெய்தவ மறக் களிறே
தமிழ்க்கு உரை தெரிவுறு மயில் வாகனா
பாவு செந்தினில் வந்து தவு கந்தா
மாறு கொடு வரு சூரனுடல் உருளவேதான்
வளர் சிவ கடல் வேலை விடு குமரா!
10 ஆறுசடை மீதில் அணிந்தானுட மகனே,
வெளி வந்து அளிதங்கு நிலமடந்தை புதல்வா,
ஆசுடனே மதுரகவி சித்திர வித்தாரம்,
அரிய தமிழுஞ்சை பெற வரிசை செய்வாயே.
வரிசை தந்தருளுலகு பிரிசமுந்துரையே,
மனதிலந்தாதி, தாவுலவு கலை மாதே,
அதியசந்தகமது விடாத புலவர்கள் தன்
அடிமையென் னெளியனுரை மகிழ்ந்தருள்வாயே
20வண்டமிழ்க்குரை தெரியும் வல்ல புலவோர்கள் முன்{{sup|23}
மன்னனரவர் தன் கதையை
வருத்துவேன் நான் என்பதெல்லாம்
கொண்டல் பெய்யக் கண்டுமணி
மேகங்கூடிப் பெய் வதெல்லாம்
குரைகடலில் குசவன் கூளி
சாதிக்கும் என்பதொக்கும்,

கடவுள் வணக்கம். செந்தில் முருகனை வணங்கும் பாடல் இது. கதை எழுந்த பகுதி திருச்செந்நூர் வட்டாரம் என்பதைக் காட்டும். நாஞ்சில் நாட்டில் வழங்கும் கதைப் பாடலில் வணக்கம் முதல் அவையடக்கம் வரை இருக்கும் பகுதி காணப்படவில்லை. வட்டார வழக்கைப் பார்த்து, பிரதி நாஞ்சில் நாட்டில் வழங்கிவந்ததென்பதை அறிய முடிகிறது.

20முதல் அவையடக்கம். இது முற்றிலும் நாட்டுப் பண் பாட்டையொட்டிய உவமைகளைக் கொண்டது. சிற்சில பகுதிகளில் இலக்கியத்தில் காணப்படும் உவமைகளை இங்கு காணலாம். ஆயினும் மக்கள் பேச்சு வழக்கில் காணப்படும் பழமொழிகள் பல இங்கு கையாளப்படுவதை நோக்கலாம்.