பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

வேறு
மதுரை வரலாறு

100மருவு மேனி அழகிய சொக்கநாதர்
புதுமையுடன் நீதி வளர் புகழ் மதுரை தன்னிலே
சோம குல மதனில் அமருமர் சற்குல அதிபனே
துங்க முடி மணி மார்யன் அங்கினி திருந்தான்
அங்கிதினி திருந்து புவியாண்ட பாண்டியனார்
அசையாத மணிகட்டி உலகுதனை நேரியாய்
கொங்கு, வடகெங்கை கன்யாகுமரி கொசாலம்
குச்சமிலாட தெலுங்கு குட தேசம் யெங்கிலுள்ள அரசர் ...............

வேறு


10நாளும் நாளும் நமக்குப் பின்புலகை
நடத்தி யரசாள ஒருநல்ல தலையில்லை
இல்லையென்றரசர் மொழி சொல்ல மந்திரிமார்
"எம்பிரானே ஒரு பெரிய விண்ணப்பம்
தொல்லுலகை ஆள ஒரு மன்னர் பிறந்திடவே
சொலப் பெரிய தானதர்மம் இப்பொழுதுசெய்.”

(என்றார்)

நல்லதென அரசர் திருமணம் மகிழ்ந்த சொக்க
நாதனார்க் கபிஷேகம் பூசைபல செய்தார்
தில்லை யங்கயற் கண்ணி சிவகாமிக்கு
20சிவ பூசை குருபூசை பல பூசை செய்தார்
குருபூசை, பரதேசி யந்தணர்களோடும்
குண்ட மதில் மங்களாகுதி வளர்த்து
அத நீதும் அஞ்செழுத்தாம் நாமம்
ஆதி வேதத்தினிலடவாய் நடத்தி

100.இது முதல் கதை தொடங்குகிறது. புராணங்களைப் போல் மதுரை அரச குடும்ப வரலாற்றை சுந்தரேசர் ஆங்கயற்கண்ணி திருமணத்திலிருந்து தொடங்குகிறது. இது பிற்கால பாண்டியர் வரலாற்றை புராண வாயிலாகவே கூறுகிறது. முதன் முதலில் அரச பரம்பரையை தெய்வங்களோடு புராண ரீதியில் இணைக்கும் மரபை பல்லவர்கள் காலச் சாசனங்கள் தொடங்கி வைக்கின்றன. அதனையே பிற்காலச் சோழர்களும் பிற்காலபாண்டியர்களும் பின்பற்றினர். இக்கதைப் பாடலின், ஒரு பிரதி அரசபரம்பரையை மெய்க்கீர்த்தியில் காணப்படுவதைப் போலவே கூறுகிறது ஆனால் இப்பிரதியில் பிரதியில் அவ்வாறில்லை.