பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஒல்லையில் அடுப்பு வைத்தே மெழுகி நிறை நாழி
ஒரு கும்பம் அரிகிட்டின மங்கலம்
அட்டமங்கலம் நிறைமரக்கால் பூவரிக்கும்பம்
அம்மானையளருகு கிக்கில் ககையாம
இட்ட கோலத்தருகே முத்தினால் நிறை நாழி
ரெத்தினத் திருவிளக் கேத்தினார்.
120கொட்டுமேளங்குரை பறையொலிகள் சங்கொலிகள்
குரை கடலெனவே அதிர்ந்தார்ப்பவே
தட்டினர் தேங்காய் முகிழ்ந்தடுப்பிலே
தானாய் தங்கப்பானை ஏத்தினார்
ஏத்தினார் உலையில் பாலரிசி சம்பாவும்
மாத்தவே குழவி தன்னை மாலையம்மை மெழுகியே
வந்தாள் பட்டுப்பணிகள் தளதளென்ன
தூத்தியே குழல் முடித்துத் தனியாபரணங்கள்
சுடரொளிகள் மின்னவே சாத்தினார்.
கூத்தனார் வெருவுற அஞ்சனமெழுதியே
130கொங்கை மீதில் அஞ்சனம் எழுதியே
நாள் கதி ரொளியெனவே மாணிக்கக் கொம்பிட்டு
ரத்தினப் பணி காதிலிட்டனள்.
வழு வழென்ற கழுகொத்த கழுத்திலே
மாணிக்கத் தாலியுங் கட்டினர்.
எழு ஞாயிறு சூட்டிய மயில் திருமேனி
அணியிலங்கு பூம்பாளையும் கட்டினார்.
இட்டனர் பொன்னரைஞாணுமிடையில் மணிமேகலையும்
ரதி மதன் மயல் கொள்ளவே சாத்தினர்.
கட்டுவம் பீலி, மயிலடி, தண்டை, பாடகம்
140காலில், மோதிரஞ் சிலம்பிட்டனர்.
பட்டுனாலுத்தரிய மிட்டனர். லட்சுமி
பங்கயப் பெண் ணெனயிருந்தனள்.

115 அரி கிட்டின - அரி கிரிட்டின மங்கலம் இவை மங்கப் பொருள்கள்
118 அட்ட மங்கலம்
125 அன்று கல்குழவியை குழந்தைபோல குளிப்பட்டி உடையுடுத்துச் சடங்குகள் செய்வது நாட்டுப் பண்பாட்டு மரல்
131 மாலையம்மைக்குப் பூட்டிய அணிகள் தாலி - கழுத்திபு எழு ஞாயிறு சூட்டிய மயில் - திருமேனியில் பொன்னரை ஞாண், மணிமேகலை இடையில், பீலி, மயிலடி, தண்டை,
பாடகம் - காலில், மோதிரம் கையில்.
143 கற்குழலியைக் குழந்தையாகப் பாவித்து நடத்தும் சடங்கு.