பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

240விண்ணாளு மத யானை
கொம்பை வெட்டி இணக்கியே சட்டமிட்டு
சட்டத்திடை உருக்குத்
தங்கமதில் தங்கமணியினல் அழுத்தி
சுட்டிக் கண்ணாடி பிறை சூளக்
கடைந்துருவி நிறுத்தி
பட்டுச் சகலாத்துப்
பவள வளைகள் தான் தூக்கி
தொட்டில் சமைத் தெடுத்து
சுந்தர மாறன் முன் வைத்தனராம்
250வைத்த மரியாதையை
மன்னன் அளித்தக் கம்மாளருக்கு
மெத்த உபசரித்து மகிழ்ந்தார்.
வேந்தர்கள் பொன்னின் தொட்டிலிலே
நித்தில மெத்தையிட்டு
நிரை நிறை பொன்னின் கம்பிக் கயிறும்
கொத்தாகக் குஞ்சம் மேலத் துாக்கி
குழந்தையைத் தொட்டிலில் கிடத்துவாராம்.

(வேறு)


கிடத்திய பஞ்சணை மீது பள்ளி கொள்ளவே
கிஞ்சுக வாய் திறந்து வஞ்சிப் பெண்கள் தாலாட்ட
260கடுதனையுண்ட சொக்கர் அங்கயற்கண்ணி யருளாலே
காணியாள வந்த தொரு காவலனோே யென்பார்.
கண்ட நாடு கொண்டு பொன்னிகரை நாடு சேர்த்து
கல்லு வெட்டி நாட்ட வந்த காவலனோே யென்பார்.
சென்று அங்கு உயரும் செம்பொன் மகா மேருவினில் பதிக்க
தெய்வ பாண்டியன் குலத்துதித்த திலகனோ என்பாரும்
தொண்டு செய்யும் அடியாரும் அஞ்செழுத்தும் வாழவே

240 248 புதிய தொட்டில் செய்ததை வருணிக்கின்றன.
250 மரியாதை - தச்சருக்குக் கொடுக்க வேண்டிய கூலியும் பரிசுகளும்
262 கண்ட நாடு கொண்டு, கொண்ட நாடு குடாதான் என்ற வாசகம் விஜய நகர ராயர்களது சாசனங்களில் மெய்க் கீர்த்திப் பகுதியில் காணப்படுகிறது. கதை எழுந்த காலம் இச்சாசனங்களின் காலத்திற்குப் பின்னதாகவே இருத்தல் வேண்டும்.
பொன்னிகரை நாடு - சுந்தர பாண்டியன் 1, குலசேகர பாண்டியன் இவர்களது வெற்றிகளை இது குறிப்பிடும். அடியார் - சிவனடியார்
260-273 அரண்மனைச் சேடியர் தாலாட்டுப் பாடினர்.