பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

சொக்கநாதர் அருளால் வந்த சுடரொளியோ என்பாரும்.
மீண்டு பேசும் மருவலரை வெட்டியிரை யேத்தவே
வெல்லும் பரியேற வந்தவேந்தனோ என்பாரும்
270அண்டர் நாயகன் திருக்கோவில் பூசைக்கும்
ஆகமதத்திபடி நடத்தும் மாராசனோ யென்பாரும்.
திங்கள் மும்மாரி பொழிந்து பலபட்டறையும் வாழவே
தெய்வ சந்திரன் குலத்துதித்த திலகனோயென்பாரும்
எங்கள் குலத்துக்கு ஒர் ஆளியான திரனோ
என்று தாலாட்ட பஞ்சணை மீது பள்ளி கொண்டார்.

(வேறு)

வேறு சந்தம்


பள்ளி கொள்ளுமந்தப் பாலகனுக் கெட்டா மாதம்
பாலும், பழமும், சக்கரை சீனிதானுமாய்
வெள்ளித் தளிகையிலிட் டொன்றாகக் குழப்பியே
280வேந்தன் மடியில் வைத்து அமுதுாட்டி மேவினர்
நாளும் நாளு தர்மந் தழைக்கவே, சீர் விளங்க
நாலு வேதமும் நாதமிட வாலச் சந்திரன் போலவே
ஆளுக்கழகன் அதி ஞான வல்லபமாறன்
ஆண்டு நின்று தன்புவி மீது வாழவே
நீண்ட குஞ்சி முடிக்கு அஞ்சனம் மஞ்சளை பூசி
நெத்திக்கழகாயப் பொட்டுமிட்டு சுட்டிகட்டி
தூண்டாமணி ரெத்தினமும் முத்து மாலைகளும்
ஞால முன்குழலுமே தார்வடமு மணிந்தார்.
வேண்டு விரலாழி வளைக் கச்சமும் கட்டி
290வீரு தண்டைச் சதங்கைக் கிண்கிணியுமணிந்தார்.
ஆளுக் கழகனை அலங்கரிக்க, அங்கையற்கண்ணி
அழகிய சொக்க நாதரையும் போற்றி வலம் வந்து
காணிக்கையிட்டு, வைகைக் கரையம்மையைப் போற்றி
கல்யாணமுங்கூடி யஞ்சு திருவயது செல்ல,

(வேறு)


அங்கயற்கண்ணி, அழகிய சொக்கரருளால்
வஞ்சியிடைக் கொடி, மன்னவர்க்கின்னமுதான
மாலையம்மை, பின் நால்வரையும் பெற்றெடுத்தாள்.

274 294 இளவரசன் வளர்ந்து ஐந்து வயதான பொழுது நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கூறுகிறது
297 முதலில் பிறந்த குழந்தை குலசேகரன் அதன் பிறகு சில ஆண்டுகளில் நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் பெயர்கள் 300, 301 வது அடிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.