பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

பெத் தெடுத்து வளர்த்தாளே யுலகந்தழைக்க
பிஞ்சு மதி போலே யஞ்சு பேரும் வளர்ந்தார்
300முத்துப் பெருமாள், முகில் நகுலப் பெருமாள்,
முடி சூடும் பெருமாள், பாண்டிய பெருமாள்தனையும்
சித்திரமாக எழுந்து ஒத, பள்ளியில் வைக்க
சீத்துவமான தொரு வாத்தியார் தமையழைத்து
முத்து நிறை நாளி முப்பது, பொன்தட்சினையும்
மூத்த நயினார் முன் வைத்து முகிழ்த்தமுங் கொண்டார்.
பொத்தகம், பொன்னிலெழுத்தாணியைக் கைப்பிடித்தே தான்
போத பதினெண் சோடு ஞானமுங்கத்தனரே
கத்தார், ஆதி யாகம தாப சித்தாந்தமும் கத்து
காரிகை கத்து கவிபாட்டு வந்ததின் பின்பு
310கொற்றவனுக்குக் குடை வாழ, வெற்றி வளுக்காகக்
கூட்டமாக வந்தகிலர் ஒட்டமாக கடிதாகச் சென்று
கும்பிட்டுச் சென்றார்கள். தேவிக்குப் பூசை நடத்தி
வெட்டு வானந்தன் நிறமாக்கும் பொழுது
வேந்தனைப்போல சமத்தருண்டாக்கி
தாட்டிமையாலே திரி பொரி சக்கரை தேனும்
தந்த முகன் முன்பு வைத்து முகிழ்த்தமுங் கொண்டார்
கொம்மை முலையார் குரவையிட வாச்சியங்கள்
ஊதவே தேங்காயுந் தட்டினர் முகிழ்த்தத்தில்
அந்த முகிழ்த்தத்தில் கச்சை கெட்டியு மிரட்டு
320அண்ணாவியுஞ் சென்று துர்க்கை தேவியைக் கைதொழுதார்
முத்தச்சி வாரமாய். நேரந் தொட்டு நடந்தேறின்
முகிழ்த்தம் கொண்டே வாள் பரிசை எடுத்துக் கொண்டார்
வாளும் சிறுவாள் வளைந்த வாள் செம்பொன் சுரிகை
வல்லயம் பதினெட்டுமே வருத்திய பின்பு
நாளும் நமக்குச் சுமந்தாள வேணுமே எண்ணி
நாடக சாலையும்,வைத்து பலமெனக் கூட்டி
வேட மகுடம் சுருதி ராகங்கள் பாட

303 சீத்துவமான - கெட்டிக்காரரான (நாஞ்சில் நாட்டு வழக்கு)
306 - கத்தனர் - கற்றனர்.
320 322 பல பரிசுகளை பரப்பி வைத்து எடுக்கச் சொன்ன பொழுது, குலசேகரன் வாளை எடுத்தான். இக்கதை ஜான்சி ராணியைப் பற்றியும், கட்டபொம்மனைப் பற்றியும் வழங்குகிறது.
323 325 குலசேகரன் வாள் பயிற்சியும் வேல் பயிற்சிகளையும் பெற்றதைக் கூறும். வல்லயம் வேல் போன்றதோர் கருவி