பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

நட்டுவக்கூத்தாடி வரும் கார் குல்லா நம்பிரானையும்
அவிழ்த்து பெரிதாக்கி
கொட்டு வாச்சியம் முழங்க குளந்தனிலே
கொண்டு சென்ற நம்பிரானைத் தான் சிலர்
பட்டினாலே தான் துடைத்து புனுகு, களபம,
பன்னீரும் தான் தெளித்து மல்லம் வைத்து
360மல்லமும் கல்லணையதும் பொன்னினாலே
வட்ட வார்முகமும் ஈடும் பொன்னினாலே
சல்லி சதங்கை தண்டை பொன்னினாலே
தாப்பிணி வார், கால்படியும் பொன்னினாலே
பொன்னினால் கழுத்துக் கட்டி வீசும் வாரும்
பூக் கொண்டையும் கால்தண்டையும் பொன்னினாலே
வன்னி நடையிடும் காலில் வீரதண்டை
பையக் குறையும் சுவடுகளும் தானும் கட்டி
கன்னமயிர் பரை வாரும் கச்சை குச்சையும்
காலு நாலுக்கு மயிர்கள் தானும் கூட்டி
370சன்னாயமும், குப்பாயமும் தானும் பூட்டி
தம்பிரான் முன் நம்பிரானக் கொண்டு வந்தார்.
மன்னவரும் பரியேறக் கொண்டு வந்தார்.
இந்திர லோகச் சட்டை சாத்தி பட்டுடுத்து
இரத்தினம் சவடி முத்து மாலையிட்டார்.
சந்திர வதன முதல் பொட்டுமிட்டு
சங்கிலி சரப்பணி பதக்கம்சாத்தி
முந்த விரலாழி முன் கை முதாரியும்
முத்து வளைக்.........
மந்திரி மார்............
380மன்னவரை அலங்கரிக்கச் சென்று நின்றார்.
சென்ற வரும் மன்னவரை பரியாள்
சித்திரப் பரியின் மேல் ஏத்துவாராம்.
மன்றில் மன்னர் பரியேற மாற்றலர்கள்
மலையேற மாதரெல்லாம் மையலேற
குன்றும் கடலும் ஆகாசமும் தூசியேற
கொங்கு வடகெங்கை மட்டும் புகழ் எழ
வென்றி முனை நம்பிரானும் அபிமானித்து

358-59 குதிரையைக் குளிப்பாட்டி பட்டினால் துடைத்தார்கள்
360 -370 குதிரையை அலங்கரிக்கப் பயன்படுத்திய பொருட்கள்
381-85 குலசேகரன் பரியேறி ஓட்டி மீண்டதை உயர்வு நவிற்சி உத்தியால் கூறும் பகுதி இது