பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

மீள வட்டமிட்டு மெள்ள கொஞ்சிக் கொஞ்சி
விதானமாய்த் தான் மிதிக்க தண்டை பம்ப
390தாள வட்டமிட்டு தித்தி தித்தி யென்ன
தக கிட கிரிதி தக கிட கிரிதி என்று ஆடும்
ஆணழகன் இந்த வண்ணம் தம்பிமாரும்
ஆடல் பரியேறி மன்னர் வீற்றிருந்தார்.
பரியேற்றும் பலகலையும்
கரியேத்தும் மல்போரும் கற்று
தெரிசனையில் சிவப்பொருளை
தென்கலையும் வடகலையும்
தரியலர்கள் மணவாளன்
தட்டுமறித்து பந்தெறிந்தார்.
400பந்தாட்டும் களம் காட்டும்
பாடி யோடி அசந்தார்.
கந்தன் கண்ணனென்பார்.
காமனென் பார் மடவார்கள்.
அந்த வண்ணம் பதினாறு
அரசருக்கு வயது செல்ல
மருமணக்கும் குழலாளை
மணம் செய்ய வேணு மென்றார்,
மணம் செய்யவே மச்சினத்தார்
வகை தன்னிலே பெண் பேசி
410கண மிதிலே யியம்பிடவும்
கடுகவிட்டார் ஒட்டனையும்
ஒட்டனும் நிலமாளும்
மன்னருக் குகந்த சில மந்திரி மாரும்
தாட்டிமையாழ் வெட்டு மாறன்
தன்னை நிகரில்லா மன்ன
தம்பிரானெண்ணம் பெண்களை

381-389 பரியேறி மீண்ட நிகழ்ச்சி கூறப்படுகிறது.
395 பரியேற்று - குதிரையேற்றம். இளவரசர் பயில வேண்டிய கலைகளில் ஒன்று.
396 கரியேத்து - யானயேற்றம் (பேச்சு வழக்கு)
405 406 இளவரசனுக்கு பதினாறு வயதானபோது மணப்பேச்சு எழுந்தது.
408 மச்சினத்தார் - மைத்துனர். இவர்கள் வேணாட்டரசர்கள் பத்மனாபபுரத்திலிருந்து தென் திருவிதாங் கோட்டை ஆண்ட பரம்பரையினர்
412 ஒட்டன் - ஒற்றன் (பேச்சு வழக்கு - நெல்க, நாஞ்சல்)