பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மாலையம்மைதனைத் தொழுது
காமனும் ரதியும் போலக்
550கை கலந்து வாழ்ந்திருந்தார்.
சோமகுல வங்குசபதி
சுகமாக இருந்திருந்தார்.
அன்னாளிை லமைச்சர்களும்
அரிய திருத்தம் பிமாரும்
இகல் வேந்தர் தமக்கிணங்க
செங்கோலு மர சிருக்கை
முடி சூட்டத் திட்டமிடுகிறார்கள்.
செலுத்த அவர் சால நன்றாய்
அங்கையற்கண்ணி யருளாலே
அபிஷேகம் வைக்க வேணும்
560கருவூலக் கணக்கரையுஞ்
ராயசக் காரரையும்,
திரு முகத்துப் பிள்ளைமாரை
திட்டெனவே வர வழைத்து
பண்டு வைத்த கருவூலமும்
பணப்பெட்டி நாகமணியும்
கொண்டு வாரும் அறை திறந்து
கொற்றவர்க்கு முடி சமைக்க
கொற்றவன ருளாலே
கொண்டு வந்தார் நன் மணிகள்
570அத்தனையில் நல்லதெல்லாம்
அடைவுடன் இவர் தெரிந் தெடுத்து
பங்கயக் கனகம் இடை கலந்து
பதிப்பாராம் நாகமணி
நாகமணி ஒரு பத்தி பச்சை யொருபத்தி
நாகரத்தின நீலமணிகளொரு பத்தி
மாகமதில் அணி கிரண வொளி வெளிப் பரந்திடவே
மணிகள் பல வொளி வீச வைத்தார்.

551 சோமகுல வங்குசபதி-சந்திரகுல வம்மிசத்தலைவன் குலசேகரன்
553-559 குலசேகரன் தம்பியரும், அமைச்சர்களும் அவனுக்கு முடிசூட்டத் திட்டமிடுகிறார்கள்.
560 -563 கருவூலக் கணக்கர் ராயசக்காரர் திருமுகத்துப் பிள்ளைமார் - இவர்கள் உயர்தர அதிகாரிகள். பொக்கிஷம், அரண்மனை நிர்வாகம், கட்டளைகளை நிறைவேற்றுவோர் முதலியவர்கள்.
570- 672 பலமணிகள் பதித்து, தேவர் உருவங்களமைத்து பொன்னால் மகுடம் செய்து முடித்தார்கள்.