பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

மூவர், மலைமகள், மலரின் மகள், கலையின் மகளும்
வைத்தார்கள் பத்தி முத்தி சித்திர ஞானியர்கள்
580பகவானு மறுபத்து மூவர் முதலியரும்
அத்தி முனிகளிட்டப்பதி இந்திரனும் ஆறுமுகன்
அடைவதிலே தும்புரு நாதரை யிருத்தி
பத்தி பல பத்திகள் பதித்து திசை தோறும்
பல மணிகள் காண ஒளி வீசி நிலையொப்ப
சுத்தி வெளி வட்டம் இடைவட்டம் நடுவட்டம்
சுடரகிமபுரி முகந் தூவிகளும் வைத்தார்.
மத்தமு மடித்திலை மடித்திசை வெளிக்கே
மதி யிரவியின் னாயகம் பதித்தனரே
பதித்தனர் பணிக்குறை முகிழ்த்த முடி தன்னை
590படகு கிடி விடி முரசு வெடியதிரவே தான்
விதித்த விதியின்படி யெடுத்ததனை மாந்தர்-பல்
வேந்தர்கள் விருந்த ரசர் முன்பு வைத்தனர்
வைத்த முடி கண்டு மன்னன் மெய்த்து, மன்னனப்போ
மணிகள் பணி குதிரை இடைவளையல் பலசிவிகை
எத்திசையிலரசர் புகழ் நித்த கலியாணன்
இறை கூலி சவடி துகி லொளிர்ந்து அளித்தனர்.
மெத்த மன மகிழ்ந்து மாந்தரும் வேந்தரும்
வேந்தனுட விடை கொண்டு வீதியிலே போனார்
போன பொழுதரைசர் குலத்தில் தனப்போதே
600புகழ் பெரிய மந்திரி மாரை முக நோக்கி
தானமுடன், அபிஷேகம் மண்டபம் வையுமென
சடுதி கொடு வானவரை மாறன் மகிழ் வைப்பார்
மன மெய்க்க மணி மகுட முடிவைக்கவேதான்
மாடமாளிகைக் கூடம் மண்டபமமைத்தான்.
கண்டு மயக்கப் பலபத்தியுரு வைத்துத் தானும்
கன்ன சாலைகள் தூவி மின்னவே வைத்தார்
தினம் தேய்த்த கடல் முத்தை படியுத்திரைத்தே
தீத்தினர் சுவரது சிறந்திலங்கிடவே
இலங்கு மணி மண்டபத்தில் சுவரெல்லாம்
610ரதி மதன் எழில் பூவைக் கிள்ளையும்
திலக நுதல் வேணு தை கும்ப குடங்களும்
சிவன் உமையுந் திருமாலு மயனுமிக எழுதுவார்.
பல புன்னைப் பூ மாக்குலை வாழை எழுதுவார்

580 - 583 பல தேவர்கள் உருவங்களை மகுடத்தின் மேல் புறத்தில் செதுக்கினார்கள்.