பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கோட்டைகளையும் கைப்பற்றப் படையெடுத்தான். ஐந்து சகோதரர்களும் படைதிரட்டி அவனை விரட்டினார்கள். கன்னடியன் தோற்றோடிய பின் குலசேகரன் கோட்டைப் பாதுகாப்பை காளிங்கன் என்ற தளபதியிடம் ஒப்படைத்து விட்டு மதுரைக்குச் சென்று விட்டான். படையெடுப்பு அபாயம் மறைந்ததும், வள்ளியூர் அரசாங்க நிர்வாகத்தில் ஊழல்கள் மலிந்தன. லஞ்சமும், அநியாயமும் தலை தூக்கின. இக் காலத்தில்தான் வீணாதிவீணன் கலகம் தோன்றியது. அவன் குலசேகரன் ஆணையென்று பறை சாற்றி குடக்காசும், கலியாண வரியும், சாவ வரியும் வசூலித்தான். இதையறிந்த குலசேகரன் நாடு திரும்பினான். இதற்குள் வீணாதி வீணன் கோட்டையேழுப்பி போட்டியாட்சி நடத்தத் துவக்கினான். சலசேகரன் தனது தம்பிமாரை வரவழைத்து அவன் மீது படையெடுத்தான். விணாதிவீணன் கைதியானான். தன் கதை முழுவதையும் சோன்னான். நியாயமான வழியில் வாழ வகையற்றுப் போனதால் கொள்ளையடித்து அதில் காவலருக்கும், ராணுவத்திற்கும், அதிகாரிகளுக்கும் பங்கு கொடுத்து தானும் பெருஞ் செல்வம் சேகரித்ததாகச் சொன்னான். இந்நிலையை அரசனுக்கு விளங்கும்படி செய்யவே பகிரங்கமாகக் கோட்டை கட்டியதாகவும் கூறினான். அரசன் கொடுத்த தண்டனைக்கு உட்படுவதாகக் கூறி வணங்கினான். அரசன் அவனை இளைய மந்திரியாக்கிக் கொண்டான். பின்னர் நடந்த கன்னடியன் போரில் விணதிவீணன் குலசேகரனுக்காக போராடி உயிர் துறந்தான்.

இரண்டாவது கன்னடியன் போர் திருமண மறுப்பால் தொடங்கியது. கன்னடியன் தன் மகளைக் குலசேகரனுக்கு மணம் பேசித் தூதனுப்பினான். தலசேகரான் மறுக்கவே போர் தொடங்கிற்று. வள்ளியூர் கோட்டை அழிந்தது. குலசேகரனைத் தவிர, அரசகுலத்தினர் அனைவரும் போரில் மாண்டனர். குலசேகரன் சிறைப் பட்டான். அவனைப் பல்லக்கில் தூக்கிச் சென்று தன் மகளுக்கு மணம் செய்விக்கக் கன்னடியன் முயன்றான். ஆனால் குலசேகரன் பல்லக்கிலேயே வைரம் தின்று உயிர் விட்டான். கன்னடிய இளவரசி இதையறிந்து உயிர்நீத்த குலசேகரனுக்கு மாலையிட்டு உடன் கட்டையேறினாள்.

இக்கதையை சிவசுப்பிரமணியத்தேவர் சொல்லக் கேட்டு நான் அக்கதைப் பாடல் பிரதி கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன். பல நண்பர்களிடம் சொல்லி வைத்தேன். வில்லுப்பாடல் புலவர்களை விசாரிக்கச் சொன்னேன். தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் தேடினேன். பல்லாண்டுகளாகத் தேடியும் இக் கதைப் பாடல் பிரதியெதுவும் கிடைக்கவில்லை.