பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மயில் புறா தாரா எழுதுவார்
மலையிலகு மண்டபத்தில் சுவரெல்லாம்
மணிமாலை, முத்து ரத்தினம் விதானிப்பார்
மாலைகள் பழுக்காய்கள் பூவிதிகள் கொடியுடன்
மாந்தளிர், பிச்சி இருவாட்சி புன்னை தூக்கிடுவார்
கொழுந்தான மாந்தளிர் குருவிஞ்சி பால
620கோல நீலப் பட்டுச் சல்லி தூக்கிடுவார்.
சல்லி சவரங்கள் சகலாத்து வடிவரிசல்
சந்திர காந்தியுடைய மணிகள் தூக்கிடுவார்
வல்லியர்கள் புனுகு களை பன்னீரால்
வழித்தார் பன்னீர் மண்டபம் மணம்வீச
எல்லியர்களாண்ட குருமணி விளக்கேற்ற
இந்திரன் இருக்கும் ஒளி மண்டபம் போலே
மண்டபம் குறைவில்லாத அழகுடன் முகிழ்ந்தபின்
மணிமகுட முடிசூட மன்னவனை யன்று
கொண்டு வந்தார் திருமஞ்சனம் பொலிந்து
630கோல வண்ண மண்டபத்தரிபாசனத்தில்
எண்டிசையும் வாழ எழுந்தருளு வித்து
இராச குரு வேந்தனை சடங்கு செய்யவேதான்
குண்டத் திலோமம் வளர்த்து திரை வளைத்து
குங்கிலிய தீபமோடு மணி மாறியே தான்
பணி மாரியுந் வேத மந்திரப் பொருளாலே
பட்டு நூல் காப்பதும் கட்டினர் கையில்,
மணியான கும்பங்கள் தாபித்து
மன்னவன் திருமுடிக்கே சொரிந்தனராம்
சொரிந்தபின் பொன்னெழுத்துத்துகி லுடுத்தித்
640துய்ய திருநீறு திரு நெத்தியில் அணிந்தார்
விரிந்த குழலை மேல் தூக்கிக் கட்டி
நறுமலர் மனமாலை கடுகமலச்சூடி
மேவு சங்கிலி பாகங்கஞ்சவடி சாத்தி
மதம் பெறு திருப்புயம் அழகு பெறவே தொட்டு
வாகு வலயம் முன் கை மேல்தோளிலிட்டார்

614 -657 முடி சூட்டு மண்டபம் புதிதாக இயற்றி அதனை பலவகையாலும் ஏவலர்களும், தொழில் வல்லவர்களும் அலங்கரித்தனர். இவற்றுள் சில தேர் திருவிழாவின் போது கோவில் அலங்காரங்களை ஒத்தவை. சில காலப்
போக்கில் மறைந்து விட்டன போலும், மங்கல நாட்களைக் கொண்டாடுவதில் முடிசூட்டும் விழாவை நமது நாட்டில் கொண்டாடிப் பல நூறாண்டுகளாயின.
இனி அவ்வழக்கம் தோன்றுவதற்கில்லை.

640 திருநெத்தி-திருமுகம் (நெற்றி)