பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

பாவித்து மந்திரிகள் பரி கரிகள் தம்பிமார்
பல்லக்கின் மீதேறி வரு வாராம்.
பல்லக்கதில் மூத்த உடையார் வல்லவ ராசர்
பாரப் பிரபுக்கள் காலிங்க வில்லனுடன்
710செல்லப் பெருமாளும் சீவலகத் திய தேவர்
தீரன் திருமங்கை ஆள்வானும், திரு வனந்தாள்வாரும்
மல்லத்து தென் புயத்தான் செஞ்சயனும் தொண்டை மானும்
மருவார் மணவாளன் சம்பிரிதிப் பிள்ளையுடன்
நல்லார் புகழ் ந்திடு கரைகண்டார் காங்கயனும்
நாயனைப் பிரியாத தொண்ட மானும் சேவிக்கவே
பக்கத்திலுள்ளோர் பழைய பளிக்கண் மாரும்
பாண்டியர் பின்புறத்தில் தாண்டிப் பரி மீது
தெக் குத்துப் பணிக்கர் பரிசைக் கட்டியலுமாய்
சிங்காரத் தினொடு சிரமங்கள் செய்குவார்
720வன்னப் பரியும் யானையும் அலங்கரித்து
மாகுத்தன், ராகுத்தன் மார்கள் ஏறிடுவார்
சின்னம், தவில் தாரை திடிமனொடு பொட்டியம் மேளம்,
தென்னன் திருத் தம்பி மார்கள் முன் சேவிக்கவே
என்னிலத் துள்ள படை களும் ஒன்றாய்க் கூடி
ஏழு கடலும் வளைந்தாப் போலே செரும,
அன்ன பரிபாலன குலசேகரப் பெருமாள்
அந்தப் பொழுதிலே யானையைக் கொண்டுவா என்றார்
சொன்ன மொழி கேட்டு மாகுத்தன் தொழுது கொண்டு
சுந்தரமு டையான யானை முன்னே செல்லுவான்
730சென்று தறி கெடமே சங்கிலியை அவிழ்த்துவிட்டு
தீர்த்த மாடி மேனி மினுக்கியே நாமமிட்டு
வென்றி புனை நெத்தியதிலே வீரப்பட்டம் கட்டி,
நன்றாய் அலங்கரித்தார்.
வந்த மதயானை யைக் கண்டந்த நேரமே
வானவர் கோன் ஐராவதத்தில் ஏறினாற் போலவே
சுந்தரத்துடையான் யானைமீ தேறிக் கொண்டு
சுற்றும் ஞற்றும் திருத் தம் பிமாரும் தானுமாக
இந்திரநீலே முத்தின் குடையொத்த குடைகளும்

722 அரச பவனியின் போது, பல்லக்கில் வருவோர், குதிரை மீது வருவோர் ஆகியோரின் பெயர்கள் சொல்லப்பட்டது. இவை கற்பனைப் பெயர்களே. ஊர்கள் உண்மையானவை

725 செரும - முழங்க