பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

இரண்டு ஐந்தலை நாகம் குடையிட முடி மீதில்
740அந்தரத்தில் நின்று பூமாரி துந்துபியும்
அமரர் முழங்கிட அரம்பையர் வந்து பார்க்கவே
கொத்துலாவும் கடல் பதித் தெரு வீதியெல்லாம்
குரவையிடுவார்கள், குலை வாழை நாட்டிடுவார்கள்
பந்தல் காவணங்கள் தோரணங்கள் கட்டிடுவார்கள்
சந்தனம் சவ்வாது புனுகுநீர் இறைத்து
களிப்பார் தெருவெங்கும் தலைவாசல் தனிலே தான்.
கும்பக்குடம் நிறைநாழி குத்துவிளக் கேத்திடுவார்
குழைத்து மஞ்சன நீராடுவார் தெருத்தெருக்களெல்லாம்
சித்திரம் எழுதுவார்கள், வெள்ளை தெளிப்பார்கள்
750வம்புற்றிடும் கொங்கை மடவார்கள் தங்களோடு
வட்டப் பொட்டு மிட்டு எட்டி எட்டிப் பார்த்திடுவார்
கம்பக் களியான மீதிலேறித் தம்பிமாரும்
காவலனங் காவணத் தோடு வார நேரம்

திருகு சிந்து


காவணத் தோடு பவனி வரக்கண்ட காசினி மாதரெல்லாம்
நாமணக்கச் செய்து காணப் போனேமென்று நன்றாய லங்கரித்தார்
பூமணக்குங் குழல் கட்டிய காதிலே பொன் மணக்கும் ஒலையிட்டார்.
பொன் மணக்கும் மேனி மினுக்கியே
வாடை புனுகு சவ்வா திடுவார்.
அன்னத்தை வென்ற நடையிடை
760பாவித் தலங்கரித்தே வருவார்;
முன்னித்திடை அல்குல் மேலே
பணிப்பட்டு சேலை சுத்திடுவார்.
சன்னை நகையால் விழியால் மருட்டி
சடக்கடித் தே விழுவார்;
வாராரும் கொங்கைக் குறியோடு
மாதர் வருங் குறி காட்டிடுவார்,
சீராடித் தோழி மாரோடே
தெருவில் சறுக்கி வருவாரும்
கூர் வேல் விழிக்கு அஞ்சன மிட்டு
770நெத்திக்குக் குங்குமப் பொட்டிடுவார்,
மாறேறி மஞ்சணை பூசி
மயங்கி மயலேறியே ஒருத்தி
ஊரேறிப் பார்க்க நடுவே புறப்பட்டு
பட்டு டை குலைந்தாள் ஒருத்தி