பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கூந்தல் குலைய வெது பாணம் சொரிந்து
கொண்டாய் நீ கொள்ளை என்பார்
மாதர்கள் சேர் மையலாக
இப்படிக் காற்றம் போராக
அணிமார்பன் கையத்து பொறும் போர்
நமக்கினி வாய்த்ததே என்று சொல்ல
வாரச்சிலை வளை தூவிட வாளஞ்சி
820வானமும் தானடுத்து
காரானை மேல் ஏறி கொற்றவர் தாமு
முன்பே மணி மாரன் நேராக -
மாதர்கள் முன்வந்து நன்றாய்
நெருங்கிப் பொருத னராம்
நெருங்கிய பூவாளி மாதர் தனத்திலும்
கீழ நெஞ்சிலும் மூடிக் கொள்ள
தயங்கிய பூமாலை போலவே மாதர்
கருத்தழி ந்தே போவார்
விழுந்த மடவார் தம் காமக் கணக்கும் நிலை
830வேலை யொலி தனக்கும்
குளிர்ந்திடும் தென்றல்
நெறி புக்கு மஞ்செம்
மேனி குங்கும வாசனைக்கும்
தன்றுலை வாய் மெழுகது போலே
சரிந்தாளே தோழியர் மேல்
தோழியரும் அன்னை மாதரும் நின்று
சுருக்காய் பறைந்து அவளை
ஆளிவளர்க இருந்தாளே எங்கள் சொல்
லானது கேளாமல்
840பூழியன் வார பவனி காண
புறத்துப் போகாதே என்றேனே
மீளக் கடி வைத்த சிங்கியைப் போல்
மெலிந்து விட்டாய் மகளே
மெலிவாயிப்படி இந்தத் தெருவிட்டு
மேலத் தெருத் தனிலே
கலிங்கலிங் கென சிலம்பு தண்டை கொஞ்ச


813- வெது பாணம் -சுடுகிற அம்பு.
842- சிங்கி-குற்றாலக் குறவஞ்சியில் ஒர் பாத்திரம். அவள் கணவனைப் பிரிந்து பல நாடுகள் சுற்றி மீண்டபொழுது தனது தாபத்தை அவனுக்குத் தெரிவிக்கிறாள். இப் பிரதியின் காலம் குற்றாலக் குறவஞ்சிக்குப் பிந்தியதாக இருத்தல் வேண்டும்.