பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

வட கெங்கை நாடு மட்டும்
சேதுக் கரையளவும்,
தென் மதுரை நாடு மட்டும்
கன்னடியன் சீமை மட்டும்
காஞ்சி புரத் தளவும்
ஆண்டிருந்தார் உங் குலத்தில்
920அன்றிருந்த சீமைகளை
பாண்டியனே நீயு மிந்த
பல சக்கரப் படையோடே
தென் மதுரைதனிலிருந்தால்
தேசுனக்குப் படியாது.
வன்மையுள்ள காஞ்சிபுரம்
நகரதில் போய் இருக்க வேணும்.
வண்மையுள்ள மந்திரிமார்
மலரடியை தொழுதிறைஞ்சி
உண்மை சொன்னோம் பாண்டியனே !
930உம் ஆணையையும் கருதி
காளிங்கன் முதலாயுள்ள
கருமமுள்ள மந்திரிமார்
மேலு மங்கே வருவதெல்லாம்
விசார மிட்டுச் சொன்ன போது
மந்திரிமார் சொன்ன போது
மன்னன் குலசேகரனும்
சிந்தையுறக் கேட்டிருந்து
சிறந்ததொரு நாளையிலே
சுரணையுள்ள புரவியையும்
940சிந்தாமணிப் போராணையையும்
காரி குல்லா நம்பிரானை
கல்லணை வைக்கச் சொல்லுவாராம்
சொன்ன பொழுதந்தச் சரணியும்
கொதுக்கப் பரிதன்னை அலங்கரித்தார்.
மின்னை யொத்த ஆசனமிட்டான்
மிகத் துட்டக் கடிவாளங் கட்டி
பச்சை நித்திலம் அல்ல வைத்தான்

914-921 குலசேகர பாண்டியனது முன்னேர்கள் ஆண்டிருந்த
924 தேசு-புகழ் நிலப்பரப்பைக் கூறி அவற்றை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என அமைச்சர் கூறுவர்
940 சிந்தாமணி-யானையின் பெயர்
941 காரிகுல்லா-குதிரையின் பெயர்
942 கல்லணை-சேணம்