பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பதித்த முத்தில் கல்லணை பதித்தான்.
கச்சையொத்த வார் இறுக்கிக் கட்டி
950கால் படியும் தாழ வைத்தான்
வெள்ளியாலே சூத்திரமான
விளக்கிய வன் முகரை யிட்டான்
உள்ளிய செம்பூண் தண்டையாம்
ஒளி பொருந்து கால் தண்டையாம்
மாணிக்க முத்தினால் பைக்கு உரையும்
மரகதத்தால் சுவடுகளாம்
ஆணிப் பொன் நுரையிலையாம்
நுரையிலையால் தூக்குகளாம்
சதங்கை தண்டை தப்பிணி வார்
960இலங்க மாண்டிலுந்தான்
நாலு காலுக்குங் சிலம்பணிந்து
நடுகாலுக் குஞ்சல்லி கட்டி
தட்டுப் புனுகு சந்தனம் கொண்டு
கெட்டிக் குதிரை முகத்திலிட்டான்.
வட்ட மிட்டோடி வலக்காலை
வடதிசையை நோக்கிடுமாம்
எட்டு திக்கிலும் யானை யஞ்சும்
எட்டடி எட்டி மிதித்திடுமாம்
கோல வண்ணப் புர விதனை
970குறையறவே அலங்கரித்து
கொண்டலொத்த சானி தன்னை
கொண்டு வந்தான் சரணி யப்போ,
வந்து நின்ற புரவி மீதே
மன்ன னெங்கள் பாண்டியனும்
அந்த நேரம் முகிழ்த்தம் கேட்டு
ஏறு வாராம் நம்புரான் மேல்.
கொஞ்சும் பரி முன்னடக்க
குல யானை பிந்திவர
நெஞ்சஞ்சா வன்னியர்கள்

948 கல்லணை-குதிரை மீது வைத்துக் கட்டும் சேணம்.
950 கால் படி - மிதித்து ஏறத் தொங்கவிட்டிருக்கும் லாட உருவமான இரும்பு-வளையம்.(Stirrup).
952 முகரை-கண்டிறைப்பு
971 சானி-பெண்குதிரை
972 சரணி-குதிரைகாப்போன்