பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மாமுண்டி தன்னக் கடந்தே நடந்து
வகைப் படு திருச்சிராப் பள்ளி சென்றார்.
செம்மணம் தனக்கரிய செவ்வந்தியப்பரை
சித்த முற மெய்த்துக் கருத்தில் -
இருத்தினார் பொன் முடி இலங்குமுடி வேந்தர்
1020ஏறினார் மாறினார் எல்லோரும் அவ்வறையிலே.
பரித்திரள் கரித்திரள் முன்னே நடக்க
பனிக் குடை நிழற்ற மன்னர் காவிரி விட்டார்.
நோயிட்ட வளை சிலர் வளைத்து மலையாளர்
நீட்டியே இட்டிட வெட்டும் அடக்கரும்
முறுக்கொடு நிமிச்சவர் எடுத்தவர் படைக்குள்
மோதினார் கூவையூர் செட்டி குளம் விட்டார்.
செட்டி குளமான பட்டியும் விட்டு
செருக்காய் நடப்பார் இருப்பார் தவிப்பார்.
முட்டியே எழும் தூசி வானிலடைய
1030மூரி வரி வாண மொடு தாரை சின்ன மூத
கட்டிடும் சோத்தை அவிழ்த்து உண்டிருப்பார்.
களித்தே விழியார் நெளித்தே நடப்பார்
தொண்டிய மேளம் திடிமன் முழங்க
தூசி எழு வானிடை வாசனை மணக்க
வாசி குதி கொண்டிடவே வற்றிச் சுவரும்படி
வானில் எழு இந்திரன் போல் எழுந்தருளி
ஒசை வெடி வாண மொடு தாரை சின்னம் ஊத
ஊடு பட்ட நின்ற மேகம் மேற்குத் திசையசைய
மூறி மதயானை இரு பாகமும் நெருங்க
1040முடிமன்னர் திருவண்ணாமலை கடந்தனராம்.
காஞ்சிபுரம் தென்குமரி வீசுபுகழ் ஆணை
கண்டு கொண்டாடினார் தொண்டை நாடு தன்னை
தொண்டை நாடது கண்டு கன்னடிய மன்னவர்
தொலை தூரம் ஒளி வீச மணி முடி புனைந்த
கண்ட நாடதில் பகையுண்டான நாடெல்லாம்
காவலர் தொண்டை வளநாடது கடந்தார்
பண்டை நாளிந்திரன் வென்று புவியாண்டுடன்
பங்கய வரை தனில் அங்கயல் பொறித்தோன்.
அங்கசல கொண்டாடு முகவரி வீச
1050ஆனைமேல் வானவர் கோன் எழுந்தது போலே
சங்கு திடிமன் தாமரை விருதூத
சங்கு குமிழிட்டு எங்கும் முழங்க
மங்காத காஞ்சிபுரத்திலே சென்று
வையகம் ஆண்டங்கினி திருந்தாராம்.