பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பொருந்து கயல்விழி மங்கை நல்லாளும் இலங்கு மணி முடி சூடி இசலக் காஞ்சிதனில் இருந்தார். போருக்கு முன்னே செல்லும் தம்பிமாரும் வந்து தினமும் பரிகலஞ் சேவிக்க மந்திரிமாரும் திருத் தம்பிமாரும் வாழ்த்த அங்கிருந்தானே குலசேகரன் தான். சேர்ந்த பரிகலம் சேர்வைகாரரும் சேரவா வென்றங்கனுப்பி விட்டாரே. 1100 ஆள் விட்ட போதந்த மந்திரிமாரும் அடர்ந்த படையும் குடையும் சேரும். வாள்.விட கனமடவார் அங்கு சேவிக்க மன்னன் திருத்தம்பிமார்களும் தம்பியும் இந்து நுதலார்கள் ஆலத்தி யேந்த இருந்த குலசேகரப் பெருமானை வந்து வணங்கியே மந்திரி மார்களும் மன்னன் திருத் தம்பி மாரும் நின்றனர். அங்கு நிறை மந்திரி மாருக்கு மன்னன் அரசன் திருத் தம்பிமாரையும் நோக்கி 1110 எங்கும் புகழ்சேர் குலசேகரன் தான் ரகசியமாய் ஒன்று சொல்லலுற்ருனே முன்பு வருங் காரியம் சொல்லும் மந்திரியே மூத்ததோர் காளிங்க வில்லவா கேளாய்: தென் பூமியில் கன்னிமார் தீர்த்தமாட செல்ல நமக்கு விருப்ப முண்டென்ருர், என்ற பொழுதந்த மந்திரிமாரும் இளைய ராசாக்களும் ஆகவே கூடி நன்று திருவுளம் பற்றுனிரென்ன நடத்த முகிழ்த்த மிட வேணுமென்ருர், 1120 முகிழ்த்த மிட வென்று சோதிரி கூட மொழிந்தானே காலிங்க வில்லவறு மப்போ பருந்தும் பாலும் புரச்சமும் கண்டு பறைந்தான் முகிழ்த்தம் மது நாளே என்ருன் நாளை என்ற மொழி காலிங் கவில்லவன். நல்ல குலசேகரர்க்கு உரைத்தானம். உரைத்த மொழியின் திருத்தம்பி மாரும் ஊர்தி பலதும் ராக் கொண்டு சொல்ல 1110 குலசேகரன், மந்திரிகாளிங்கனிடம் கூறுவது 1118 -திருவுளம் பற்றினிர்-வைணவ பரிபாழை மனம் வைத்தீர் 1127 ராக்கொண்டு-இரவிலேயே