பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயத்த பழவூர் கடந்து வாரறியப் பாக்குளமும் 13.40 வக்கண்ணு மலை கடந்து அங்கஞ் சிரமிகளும் அழகு பரிசை காரர்களும் துங்கப்பரி நடத்தி சுக்குப் பாறை குளத்தில் வந்தார். வேறு வந்து மன்னர் ஐந்து பேரும் சரீர சுத்தி செய்து வாய்த்த சுக்குப் பாறை குளத்தில் தீர்த்தமாடி சிந்திப் பரந்த படைக்குந்தான் இடம் கொள்ளாமல் தேச மெங்கும் தான்பரந்து வீதியெங்கும் செல்ல 1350 தண்பொருணையும், வைகை, காவேரி, கங்கை தாரணியிலுள்ள பல ஆறு ஒன்ருய்க் கூடி தென் குமரித்துறையில் வந்து பாய்வதென்ன தென்னன் குல சேகரன் தன் சேனை தீர்த்தமாட தீர்த்த மாட வேணுமென்று மன்னன் மூன்றுபேரும் தெக்கருகிலே இறங்கி தீர்த்தத் துறை தன்னில் மூத்த மயிலேறும் பெருமாள் காலிங்கன்தானும் முத்திதந்த நாதனைப் பிரியாத தொண்டை மானும் ஏத்த புகழ் காங்கயனும் பெரிய உடையாரும் - எங்கும் புகழ் கொண்ட திருமங்கையாழ்வானும் 1360 வாய்த்த சன்னிதி துறையில் தீர்த்த மது ஆடி மன்னன் குலசேகரன் தன் மின்னிடையாரும் சென்று பரப்புத் துறையில் ஒன்றித் தீர்த்தமாடி செஞ்சயனும் தொண்டை மானும் திருநீலகண்டனும் தான் அன்று தீர்த்த மும் பூவும், திருநீறும் காட்டும் அண்டர் தொழுந்தன்று வாங்கயத்தீர்த்த மாடி ஆடிக் கரை மீதிலேறி பொன் நித்தில பச்சை ஆடை சாத்தி மாணிக்க முத்தாபரணம் பூண்டு தேடிய கோதண்டராமன் பதக்கம் சாத்தி சிங்காரத்துடன் அலங்கரித்து அலங்காரத்துடன் நடந்தார். 1370 நாதனுடன் வாதாடும் நற்குமரி தன்னை 1840 படிக்குளம் - பாக்குளம், பாறைக்குளம். 1344 சுக்குப்பாறை - இப்பொழுது பாறைக்குளம் எனவ சுக்குப்புல் மிகுதியும் வளர்ந்திருக்கும் 1362 பரப்புத்துற்ை - தற்போது திப்பரப்பு என படும் ஊர். அங்கஞ்சிரமிகள் - உடலுழைப்போt