பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தாளே மன்னவர்கள் வாழ்ந்திருக்கும் பாளையத்தில். பாளையத்திற்கு வெளியே பாடி நடித்தாள் பாடும் பரசியும் பலமேளமும் பாளையத்தில் வந்த போது ஆடும்படி அந்தப் பாடும் பரசி அடக்கம் பல தடித்தாளே. 1480 அடக்கம் பலது அடித்ததையும் ஆரவாரம் செய்ததையும் மடக்கொடியாள் பெருமை கண்டு வாசலாளன் விரைந்தோடி வாயில் காவலன் கூறியது "ஆண்டவனே நீண்ட மாலே ஐவேர்க்கு நாயகமே பாண்டியனே குல சேகரா பாராளும் மன்னவரே, தாண்டும் பரிமேல் நகுலா, சமத்தருக்கு நலத்தானே, 1490 எத்திசையும் புகழ் மணக்கும் இயல் மதுரைக் காவலவா சித்தமுடன் அடியேனும் செப்பும் விண்ணப்பம் கேட்டருள்வாய் நாடக கீதம் பாடுவாளும் நட்டு முட்டுக் காரர்களும் கூட வந்து பாடுவாரும் கொட்டு வாச்சியக்காரர்களும் அங்கச் செருமிகளும் அழகு பரிசைக் காரர்களும் 1500 சொல் பெரிய வீணேகளும் சுருதி குழல்காரர்களும் கொங்கையிளம் பெண் கொடியாள் கொடியிடையான் சேவிக்கவே வேறு பங்கயஞ் சேர் பெண் கொடியாள் பதினெட்டு நாடகமும் 1479 அடக்கம்-அவையடக்கப் பாடல் பாடி நடிப்பது. 1483 வாசலாளன்-வாயில் காப்போன் 1495 நட்டு முட்டு-நட்டுவாங்கம் புரிவோரும், வாத்தியங்கள் வாசிப்போரும், மேளம் கொட்டுவோரும், பாடகரும் என்ற இவர்களோடு கூடி. -