பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈350 1860 95 அடுத்துப் புகழ் மன்னன் கலசப்பான பரசிமுன்னலே வைத்தான் ஆடும் நிகரொவ்வா வடிவழகன் அரசன் ஆட்டந்தவிர்த்த மன்னன் வாடும் கிளியன்ன மொழியன்ன மொழிநல்லாரே மன்னர் சேரும்படியிங்கே வருவார் பெருமானுன்னை யின்று செப்பிச் சடுதியாய் மீண்டும் போனன். மீண்டங்கவன் போன நேரத்திலே மெய் தளர்ந்துள்ளந்தடுமாறி இன்றிங்கரசர் தான் வந்திடில் வினைதான் விளையுமென்றறியாமல் பஞ்சணை மெத்தை யிட்டாள் பள்ளியறையிலும் விளக்கேற்றி, வஞ்சி மனம் தடுமாறி யுறங்காமல் விழித்தேயிருந்தாள். விழித்தவளும் அங்கிருக்கும் நேரம் மீண்டு வந்து ஒற்றனும் தான் ஒளித்து நாமங்கே செல்ல வேணும் என்று உற்ற மொழி மன்னர் தமக்குரைத்தான். குலசேகர வல்லியாரும் கொங்கையிள மங்கைமாரும் வண்டினங் குழலாரும் மன்னவரும் மந்திரிமாரும் உண்டுறங்கியொரு சாமம் உறக்கம் வைத்த நேரத்தில் வெளியே செல்ல தயாரிப்பு பச்சைவட மெடுத்துடுத்தார் பதக்கம் நல்ல சவடியிட்டார் கெச்சமுடன் முறுக்கு வளை கிளர்ந்தமணிப் பணியுமிட்டார் தரமான வளையலிட்டார் சரப்பளியும் எடுத்தணிந்தார் செங்கைமேல் சங்கிலியும் சிறந்த விரலாழியிட்டார் பார முடியெடுத்தணிந்தார், ரத்தினமுத்து மாலையிட்டார் தொட்ட பொன்னின் மிதியடியும் தோளிலிட்ட பட்டயமும் இட்ட பொன்னின் கிரியதும் பிடித்த பொன்னுடை வாளும் நாட்டமொத்த பாதியிரா நடுக்கூர் சாமத்திலே இட்டடுக்கி வைரமணி ரெத்தினங்கள் எடுத்தணிந்தார் 1879 . 1857 ஒற்றன் திருநீலகண்டனேடே ஒரு வரறியாமல் நடக்கலுற்ருர் நடந்து குலசேகரரும் நாட்டமுடனேட்டனுமாய் மடந்தை நல்லாள் பாளையத்தில் மன்னர் பெருமாளும் செல்லு நேரம் குலசேகரவல்லி-குலசேகர மன்னனின் பட்டத்தரசி