ஒட்டுமாஞ்செடி
என்று கூறப்படுகிறது.சிற்சில விஷயங்களிலே நான் மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும், நெடுநாட்களாகவே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும். அவைகளைப்பற்றி நான் கவலைப்படவில்லை.முடிந்த அளவு ஒத்துழைத்தே வந்திருக்கிறேன. முடியாத காலத்தில் மிக மிகக் கண்ணியமாக ஒதுங்கியே இருந்திருக்கிறேன். பெரியார் காலம் வரை அவர் வழிப்படியே நடக்கும் கழகம் பிறகு பார்த்துக்கொள்வோம், என்ற போக்கைக் கொண்டிருந்தவன்.
கண்டித்தவரில் முன்னோடும் பிள்ளை குருசாமியே!
சில தோழர்கள் இந்தத் திருமண விஷயத்தைக் கேட்டபோதே பெரிதும் ஆத்திரமும் ஆவேசமும் கொண்டனர்; துடிதுடித்தனர். உடனே அப்படிச் செய்ய வேண் டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்ட னர். இதில் முக்கிய பங்கு கொண்டு முதல்வராய்த் திகழ்ந்தவர் தோழர் எஸ்.குருசாமி அவர்கள் தான். அவர் கூறினார் என்னிடம் என்ன அண்ணா நாம் சும்மா இருக்கக் கூடாது. உடனே ஒரு கண்டனக் கூட்டம் சென்னையில் போட்டே தீர்க்க வேண்டும் கூட்டம போடுங்கள். நானே தலைமை வகித்து நடத்துகிறேன் என்று வீர முழக்கமிட்டார்.
இதனைத் தடுத்து நிறுத்தியது. நான் தான். அவ்விதம் ஆத்திரப்பட வேண்டாம், வேண்டுகோள் விடுப்போம்; விளைவைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்று சமாதானப் படுத்தினேன்.16