கலைஞரின் சட்டமன்ற உரைகள்
99
யிலே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நாங்கள் உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்று அவர்களிடத்தில் சொல்லிவிட்டு வந்தேன். அதற்குப் பிறகு மாவட்ட ஆட்சித் தலைவரின் முன்னிலையில் எல்லாக் கட்சித் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருங்குகூடிச் சில முடிவுகளை எடுத்து அரசுக்கு அனுப்பினார்கள். அவைகளைப்பற்றி அங்குள்ள
நிலைமைக்கேற்றவாறு அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது என்பதையும் யாரும் மறுக்க இயலாது. பல்வேறு கோரிக்கைகள் அவ்வப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. வரிசையாகச் சொல்லவேண்டுமென்றால், முதலிலே, முறைப்படுத்தப்பட்ட பங்கீட்டு முறை உள்ள இடங்களில் அரிசியின் அளவை வயது வந்தவர்களுக்கு வாரம் ஒன்றுக்கு 1500 கிராம் ஆகவும், சிறுவர்களுக்கு 800 கிராம் ஆகவும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தரப்பட்டது. இக்கோரிக்கையை மார்ச் திங்களில் இந்த விகிதப்படி முறைப்படுத்தப்பட்ட பங்கீட்டு முறையுள்ள இடங்களில் அரிசி வழங்க வேண்டுமென்று அரசு ஏற்று நடவடிக்கை எடுத்தது. ஆகவே புறக்கணிக்கப்படவில்லை, கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படவில்லை என்பதற்கு இது முதல் உதாரணம்.
பிறகு, அடுத்த கோரிக்கை, நாகர்கோவிலிலிருந்து கல்குளம் வட்டத்திற்குக், கொண்டுவரப்படும் அரிசியின் விலை யைச் சரிப்படுத்த வேண்டும் என்பது. இந்தக் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு கோட்டாறுச் சந்தையிலிருந்து கல்குளம் வட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் அரிசி, விற்பனை விலை இவற்றினை நிர்ணயித்தும் அவற்றினைக் குடும்ப அட்டைகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யவும் மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதுவும் நடைமுறைப்படுத்தப் பட்டது.
மூன்றாவது கோரிக்கையாக முறைப்படுத்தப்பட்ட விநி யோக முறையைக் கல்குளம் வட்டம் முழுவதுக்கும் அல்லது பற்றாக் குறையுள்ள கிராமங்களிலாவது விஸ்தரிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை இருந்தது. அதற்கு, கல்குளம் வட்டத்தில் நெல்