பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

உற்பத்தி செய்கிறவர்கள் தவிர மற்றவர்களுக்குக் குடும்ப அட்டைகள் மூலம் அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நான்காவது கோரிக்கை, சுய தேவைக்கு எடுத்துச் செல்லும் அளவு, அரிசி, நெல் ஆகியவற்றிற்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டுமென்பது. அதையும் அரசு ஏற்றுக் கொண்டு, சுய தேவைக்கு எடுத்துச்செல்லும் சிறு அளவு அரிசி, நெல் இவைகளுக்குக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. ஆனால் இவ்விதம் கொண்டு செல்லும் அரிசி, நெல் அளவினைக் குடும்பக் கார்டுகளில் பதியும்படியும் ஆணையிடப்பட்டது.

இப்படி வரிசையாக ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் இடையிலே உணவு அமைச்சரவர்களை ஜூன் மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சென்று அவைகளை உடனடி யாகக் கவனிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவர்கள் அதிகாரிகளோடு கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சென்றார்கள். அங்கேயுள்ள எல்லாக் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப் பினர்கள் ஆகியவர்களோடு கலந்து உணவு அமைச்சரவர்கள் பேசி மிக முக்கியமாக எல்லையிலும், உள்பகுதியிலும் அமல் செய்யப்படும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், கேரள மாநிலத் திற்கு அரிசி கள்ளக் கடத்தல் மூலம் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக மிக அவசியம் என்றும், அவற்றை நீக்கினால் இம் மாவட்டத்தில் உணவு நிலைமை சீர் அழியும் என்றும் சுட்டிக்காட்டினார். அமைச்சர் வெளியிட்ட கருத்தினையும் அப்பொழுது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இப்பொழுதும்கூட பழைய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சட்ட மன்ற உறுப்பினராக உள்ளவர்கள் எல்லையிலே இருக்கும் செக் போஸ்டை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைக்க வில்லை. ஆகவே, அமைச்சரின் கருத்து அப்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டது

இதனைத் தொடர்ந்து மேலவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராஜாராம் நாயுடு அவர்களும். திரு.ஜேம்ஸ் அவர்களும் உணவு அமைச்சரைச் சந்தித்து, தற்பொழுது வழங்கப்படும்