பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

அதற்குப்பிறகு, பத்து நாளைக்குப் பிறகு மறுபடியும் போராட்டம் எந்த வகையில் திரும்பியது என்றால் திருநெல் வேலியிலிருந்து சட்ட விரோதமாக அரிசியை எடுத்துச்சென்று கன்னியாகுமரிக்குள்ளே நுழைவது என்ற போராட்டத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதுதான் வேதனைக்குரியது. அதிலே ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 19 பேரும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 9 பேரும் ஆக 28 பேர் கைது செய்யப்பட்டுத் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பயங்கரமான நிலைமையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தைக் காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களையும் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகத்தான் உணவு அமைச்சர் கூறியது போல் திருநெல்வேலி மாவட்ட எல்லையில் செக் போஸ்ட் போடப் பட்டிருக்கிறது. அதே போல் மதுரை மாவட்டத்திலும், கோவை மாவட்டத்திலும் செக் போஸ்ட்கள் போடப்பட்டிருக்கின்றன.

அப்படி செக் போஸ்ட்கள் போடப்பட்டிருக்கின்ற

நிலையில் திருநெல்வேலியிலிருந்து நாங்கள் அரிசியைக் கடத்திச் செல்வோம், அதை யாரும் தடுக்கக்கூடாது, செக் போஸ்ட்டை மீறி நாங்கள் எடுத்துச்செல்வோம் என்ற முறையில் ஆளும் காங்கிரஸ் கட்சி வழி காட்டினார்கள். அதை அங்கிருக்கும் பழைய காங்கிரஸ் கட்சியோ மற்றக் கட்சிகளோ ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை- எனக்குத் தெரிந்த வரை யில் இல்லை. ஏற்றுக் கொண்டார்களோ என்னவோ தெரியாது. இதன் காரணமாக ஆளும் காங்கிரஸ் கட்சி 19 பேரும், அ.தி.மு.க. 9 பேரும் ஆக 28 பேர் கைது செய்யப்பட்டார்கள். கடந்த மாதம் 27ஆம் தேதிக்குப் பிறகு 3-8-73 வரை மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து யாரையும் விடவில்லை என்று சட்ட அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். பத்து நாள் வரை அவர்களைக் கைது செய்து விட்டு வந்தோம். அவர்கள் மறுபடி யும் தொடர்ந்து அதையே நடத்திக் கொண்டிருந்த காரணத்தால் விடுதலை செய்யவில்லை. காங்கிரஸ் (ஓ) 58 பேர் அ.தி.மு.க. 17 பேர், சுதந்திரா 9 பேர், கட்சிச் சார்பற்றவர்கள் என்ற

9