பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

து

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

உணவு நெருக்கடி

உரை : 1

நாள் : 19.10.1964

கலைஞர் மு. கருணாநிதி : தலைவரவர்களே, சமீபத்திலே நாட்டிலே ஏற்பட்டிருக்கிற உணவு நெருக்கடி குறித்து இங்கு கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புப் பிரேரணைகளை யெல்லாம் சபை முதல்வர் அவர்கள் அவருக்கே உரிய திறமையான கணைகளின் மூலம் சமாளித்திருக்கிறார்கள் என்றாலும், இந்த ஒத்திவைப்புப் பிரேரணையை முதல்வர் அவர்கள் ஏற்றுக்கொண்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இந்த ஒத்திவைப்புப் பிரேரணையைத் தந்திருக்கிறேன். சென்னை போன்ற இடங்களிலும், வேறு பல இடங்களிலும் அரிசிக்கு மக்கள் படுகிற கஷ்டங்களை எண்ணி ஒத்திவைப்புப் பிரேரணைகளில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் தொடர்பாக கோவை நகரில் அரிசி கிடைக்காமல் அல்லலுற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள் என்று காரணம் காட்டப்பட்டு ஆறு பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த ஆறு பேர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று நண்பர் அர்ச்சுனன் கலெக்டரிடம் சென்று வாதாடினார்கள். கலெக்டர் அவர்களும் அர்ச்சுனன் வாதாடிய பிறகு அர்ச்சுனனோடு சென்று அங்கே விசாரித்து கலெக்டர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த ஆறு பேர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். விடுதலை செய்யப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு சுமார் 2,000 பேர்களோடு எம்.எஸ்.ஸி. திரு. பொன்னுசாமி அவர்களுடைய வீட்டுக்கு அரிசி சுலபமாகக் கிடைக்க வழிவகை காணவேண்டுமென்று சென்றிருக்கிறார்.

2-க.ச.உ.(ஒ.க.)