பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

அன்னார் அந்த நேரத்தில் அங்கே இல்லாத காரணத்தினால், நகர சபைத் தலைவர் திரு. நஞ்சப்பா அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவரும் வீட்டில் இல்லாத காரணத்தினால் ஊர்வலமாகக் கடைத்தெரு வழியாக வரும்போது ஒரு பையனைப் போலீஸ் அதிகாரி நையப்புடைக்கவும், அதைத் தடுத்து 'ஏன் அடிக்க வேண்டும்' என்று திரு. அர்ச்சுனன் கேட்க வாய்த் தகராறு முற்றி, போலீஸ் அதிகாரி பக்கத்தில் இருந்த போலீஸ்காரருடைய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சுட்டு விடுவேன் என்று பயமுறுத்த, 'சுட்டுக் கொல்லுங்கள் பார்க்கலாம்' என்று அவர் மார்பைத் திறந்து காட்ட, உடனே அவர் தொண்டைக் குழியண்டை துப்பாக்கி கொண்டு சூடு கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட கொடூரமான காட்டாட்சி தர்பார் நடத்தியிருக்கிறார்கள். திரு. அர்ச்சுனனைச் சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரிக்கும் அவருக்கும் பழைய விரோதம் உண்டு என்று சொல்லப்படுகிறது. திரு. அர்ச்சுனனுக்காக வாதாடும் நேரத்தில், அவர் மதுவிலக்குக் கொள்கையை எதிர்த்து, சர்க்கார் திட்டத்தை எதிர்த்துப் போராடினார் என்று எல்லோருக்கும் தெரியும். அவருடைய இந்தப் போராட்டத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உடன்பாடுதானா என்ற

Mr. SPEAKER : This is a matter which may go to a court. Therfore, the hon. Member need not go into the details. Let him be brief.

கலைஞர் மு. கருணாநிதி : ஆகவே போலீஸ் அதிகாரி, அர்ச்சுனன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய எந்த விதமான வேறு பயங்கரமான நிலைமையும் ஏற்பட்டுவிடவில்லை என்று மிக துல்லியமாகத் தெரிகிறது. வேண்டுமென்றே, அர்ச்சுனனைக் கொல்ல வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்தக் காரியம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சர்க்கார் இப்படிப்பட்ட போலீஸ் அதிகாரிகளை வளர்ப்பார்களேயானால் அல்லது இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு சர்க்கார் முயலுவார்களேயானால் அதனால் பெரிய பயங்கரங்கள் ஏற்படுவதுடன் கொள்கை மாறுபடுகிற தலைவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்பதினால் இதை ஒரு முக்கிய அவசரப் பிரேரணையாக எடுத்துக்கொண்டு, உடனடியாக ஒரு பொது நீதி விசாரணையை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கேட்டுக்